Friday, October 8, 2010

யாராவது விளக்கம் சொல்லுங்களேன்?






மேலே உள்ள படங்களை பாருங்கள், என் வீட்டு முனையில் உள்ள
மின் கம்பம் மீது லாரி மோதி மின் கம்பம் இரண்டாக உடைந்து
விட்டது. நள்ளிரவு நேரத்திலும் மின் வாரிய அதிகாரிகள் அங்கே
வந்து வேறு கம்பம் வைப்பதற்கான இழப்பீட்டு தொகையை
லாரிக்காரர்களிடம் வாங்கி மூங்கில் கம்புகளில் முட்டு கொடுத்து
விட்டு சென்று விட்டனர். மறு நாளே மாலைக்குள்ளாக வேறு
புதிய கம்பமும் நிறுவி விட்டார்கள்.

எனது கேள்விகள் என்னவென்றால்
 என்னத்தான் லாரி மோதினாலும் கான்கிரீட் கம்பம் இப்படி
இரண்டாக உடையுமா?

அல்லது உற்பத்தியின்  மாமூல் கோளாறு விபத்தின் மூலம்
அம்பலமாகி விட்டதா?

உடைந்து விழுந்த கான்கிரீட் கம்பத்தை மூங்கில் கம்புகள்
தாங்குமா?

அதுவும் நொறுங்கினால் மிகப் பெரிய அழிவு ஏற்படாதா?

இந்தக் கேள்விகளை மின் வாரியத்திடம் கேட்பதில் எவ்வித
பயனும் கிடையாது. மின் தடை ஏற்படும் வேளையில் மீண்டும்
எப்போது மின்சாரம் வரும் என்ற கேள்விக்கே பதில்
கிடைப்பதில்லை.

விஷயம் அறிந்தவர்கள் விளக்கம் தாருங்களேன்!

2 comments:

  1. மிகவும் அதிர்ச்சி தரும் சம்பவம்.புதிய கம்பம் நிறுவியது மகிழ்ச்சி தந்தது.

    ௧. உடையுமா என்றால் என்ன கேள்வி அது? அதுதான் உடைந்து விட்டது அல்லவா.

    ௨. உற்பத்தியில் கோளாறு இருக்கிறதா என்பதை அந்த மின் கம்பத்தை சரி பார்த்துதான் சொல்ல வேண்டும்.

    ௩ மூங்கில் கம்புகள்தான் ஒரு நாள் தாங்கி இருக்கிறதே. பிறகு என்ன பலத்த யோசனை.

    ௪. வயர் கம்பி அறுந்து விழுந்தாலும் பாதிப்பு தான்.

    இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் கண்டால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தரவும்.

    ReplyDelete
  2. ஏன் மறுபடியும் லாரி வந்து கம்பத்தில் மோதாதா?
    --கேஎஸ்ஆர்.

    ReplyDelete