Friday, December 10, 2010

நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு எதிராக போராட்டமாம் - நல்ல நகைச்சுவை

ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றம் முடக்கப்படுவதைக்
கண்டித்து தி.க ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சுவரொட்டி பார்த்தேன். தலித் என்பதால்    ராசா குறி வைக்கப்படுகின்றார் என்ற கலைஞரின்  பாட்டுக்கு பின்பாட்டு   பாடிய    மானமிகு      தமிழரின் அடுத்த கட்ட நடவடிக்கை 
ஆர்ப்பாட்டம்     போலும்! 

பெரியாரின்    கருதத்துக்கள் பரவுவதை முடக்க நீதிமன்ற படிக்கட்டுக்களில் ஏறி ஏறி இறங்கியவர்     நாடாளுமன்ற முடக்கல் பற்றிகவலைப்படுவது வியப்பாக உள்ளது. 
இல்லை செஞ்சோற்றுக் கடனா? 

நாடாளுமன்றம்முடங்கிப்    போக எதிர்க்கட்சிகள் மட்டும்தான் காரணமா? மடியில்
கனமில்லை என்றால் ஏன் கூட்டுக்குழு  விசாரணையை முரட்டுத்தனமாக எதிர்க்க 
வேண்டும்?  ஆளும் கட்சியின் பிடிவாதம் பற்றி ஒரு வேலை தி.க கண்டிக்குமோ?

ராசா என்கிற ஒரு தலித்தின் நலன் காக்க குரல் கொடுக்கும் தலைவர்களுக்கு 
சில கேள்விகள் 

அரசு, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்கள் நிரப்பப் படாததால்      வேலை வாய்ப்பை இழக்கும் தலித் இளைஞர்கள்  பற்றி என்றாவது நீங்கள்    கவலைப்பட்டது உண்டா?

முடக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் வெளியாக என்ன செய்தீர்கள்?

அரசு ஊழியர்களாக வேண்டும்  என்று கிட்டத்தட்ட  இருபத்தி ஐந்து வருடங்களாக
போராடி வரும் சத்துணவு ஊழியர்களிலும்  போராட்டம் நடத்தியதற்காக 
பணி நீக்கம், இடை நீக்கம் செய்யப்பட்ட  தலைவர்களிலும் உள்ள தலித்துக்கள் 
பற்றி யோசித்தது உண்டா? 

குடியாத்தத்தில் ஆளும் கட்சி குண்டர்களால்  வீடு இடிக்கப்பட்டு நடுத்தெருவில்
நிற்கும் அருந்ததிய ஆதி திராவிடக் குடும்பங்கள் உங்கள் கண்ணில் படவேயில்லையா?

ராசாவிற்கு ஆதரவாக மட்டும் போராட்டம் என்றால் சிரிப்பாத்தான் வருகிறது
அல்லது ஸ்பெக்ட்ரம் பணம் இங்கேயும் கசிந்துள்ளதோ என்ற சந்தேகம்தான்
வருகின்றது.



   

1 comment:

  1. One of the person organised the meeting for Rasa is Father Jagath Kaspar, a benami of Kanimozhi. Now CBI had raided his office also

    ReplyDelete