Tuesday, February 1, 2011

மனசாட்சியில்லாத ஏ.சி சண்முகம் உத்தப்புரம் ஆதிக்கசக்திகளுக்கு உபதேசம் செய்யட்டும்!

ஜாதியை மட்டுமே நம்பி  அரசியல் கட்சி தொடங்கியுள்ள  கல்வி வியாபாரிஏ.சி .சண்முகம் உத்தப்புரம் பிரச்சினை தொடர்பாக  மார்க்சிஸ்ட் கட்சிக்கு உபதேசம் செய்துள்ளார்.  இவரைப் போன்ற சிறுமதியாளர்களின் அறிக்கைகளை   சில பத்திரிககைகள்   வெளியிட்டுள்ளன.  இவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் மார்க்சிஸ்ட் கட்சிக்கோ தீண்டாமை  ஒழிப்பு முன்னணிக்கோ  நிச்சயம்கிடையாது.  ஜாதிய சகதியில் மூழ்கித் திளைக்கும் ஆதிக்க சக்திகளின் அடிவருடி என்பதை  ஏ.சி.எஸ் மீண்டும்  நிருபித்துள்ளார்.  அண்டப் புளுகன், ஆகாயப் புளுகன் பட்டியலில் வேறு  இணைந்திருக்கிறார். 

உத்தப்புரம் கிராம ஆதிக்க சக்திகள்  மிகவும் நல்லவர்களாம் !
இனிமையானவர்களாம்! தலித் மக்களோடு  அவர்களோடு பேசி 
பிரச்சினையை  தீர்த்துக் கொள்வார்களாம், ஆகவே ஆலய நுழைவுப் 
பிரச்சினையை விட்டுவிட்டு   மார்க்சிஸ்ட் கட்சி  வேறு பிரச்சினையை
கையிலெடுக்க வேண்டுமாம்.

அடப்பாவி! சொல்கிற பொய்யை கொஞ்சம்  பொருத்தமாகவாவது 
சொல்லக் கூடாது ? இல்லை நாங்கள் அப்படித்தான் என்று தைரியமாகவாவது  சொல்லக் கூடாது? 

இனிமையானவர்களும் நல்லவர்களுமான  உத்தப்புரம் ஆதிக்க 
சக்திகள்  எதற்காக  தீண்டாமை சுவர் கட்டினார்களாம்? 

சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டபோது  மலையேறிப் போய்
அராஜகம்  செய்தார்களாம்? 

முத்தாலம்மன் கோயிலுக்குள்  தலித் மக்கள் நுழையக் கூடாது
என்று  அடம் பிடிக்கிறார்களாம்? அரசையும் ஆட்டி வைக்கிறார்களாம்? 

நிழல் குடை அமைந்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகும்  என 
தோழர் டி.கே.ரங்கராஜன்  ஒதுக்கிய   நிதியை  திருப்பி அனுப்பும்படி 
அரசை மிரட்டி வைத்திருக்கிறார்கள் ? 

அரசு உருவாக்கிய பாதையில் தலித்  மக்கள்  நடமாட  முடியாமல் 
அவ்வப்போது  தடை போடுவது  ஏனோ? 

சொந்த மாவட்டத்திலியே  போணியாகாத  கல்வி வியாபாரி 
ஏ.சி.எஸ்  ஏன் மதுரை மாவட்டப் பிரச்சினையில் மூக்கை 
நுழைக்க வேண்டும்? 

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு  நியாயம் கிடைப்பதற்கான போராட்டத்தை 
மார்க்சிஸ்ட் கட்சியும்  தீண்டாமை  ஒழிப்பு முன்னணியும்  நிச்சயம் 
தொடரும்.  அதோடு  வேண்டுமானால்  வேறு பிரச்சினையை கையில் 
எடுக்க வேண்டுமென்றால் " இவரது கல்வி நிறுவனங்களில்  நடக்கும் 
மோசடிகள், தில்லுமுல்லுகள், நில  ஆக்கிரமிப்புக்கள்,  அதிகமான 
கல்விக் கட்டணங்கள்" போன்ற பிரச்சினைகளை  வேண்டுமானால் 
எடுத்துக் கொள்ளலாம்!  

1 comment:

  1. "உத்தப்புரம் கிராம ஆதிக்க சக்திகள் மிகவும் நல்லவர்களாம் !
    இனிமையானவர்களாம்! தலித் மக்களோடு அவர்களோடு பேசி
    பிரச்சினையை தீர்த்துக் கொள்வார்களாம்",

    ஆதிக்கச் சக்திகள் எப்போதும் நல்லவர்கள்தான், அவர்களது ஆதிக்கத்தைக் கேள்வி கேட்காத வரை.

    ஆதிக்கச் சக்திகள் இனிமையானவர்கள்தான்,
    ஒடுக்கப்பட்டவன் அடிமையாய் இருக்கும் வரை.

    இதுதானே ஆதிக்கவாதிகளின் மனோபாவம்.

    ReplyDelete