Tuesday, April 5, 2011

ஐந்து கோடி ரூபாய் யாருடையது?

திருச்சியில்  ஒரு பேருந்தின் மேலிருந்து  பைகளில்  அடுக்கி வைக்கப்பட்ட ஐந்து கோடி ரூபாயை  தேர்தல் அதிகாரிகள்  கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட  ஐந்து கோடி ரூபாய்க்கு  யாரும் சொந்தம் கொண்டாட வரவில்லை.  என்னுடைய பணம் கிடையாது  என்று  அமைச்சர்  நேரு மட்டும்  அவசரம் அவசரமாக  மறுத்துள்ளார்.

ஐந்து கோடி ரூபாய்  என்பது  சாதாரண தொகையே கிடையாது. எங்கள் 
அலுவலகத்தில்  வசூலாகும்  ஒரு சில லட்ச ரூபாய்களையே  வங்கியினர் மூவர்  கையில் துப்பாக்கி, தடியோடு வந்துதான்  எடுத்துச்செல்வார்கள், 
இங்கே    ஐந்து கோடி ரூபாய்  அனாமத்தாக  ஒரு பேருந்தின் மேல் 
போடப்பட்டுள்ளது  என்றால் , அவ்வளவு  செழிப்பாகவும்  பாதுகாப்பாகவும்   தமிழகம்  மாறி விட்டதா? 

ஆக தமிழகத்தில்  ஐந்து கோடி ரூபாய்  பறிமுதல் செய்யப்பட்டாலும் 
அது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று  கருதக்கூடிய கோடீஸ்வரர்கள் 
உள்ளனர்  என்பதுதான்  உண்மை. உழைத்து சம்பாதித்த பணமாக 
இருந்தால்  இவ்வளவு அலட்சியமாக  இருப்பார்களா? 

ஜனநாயகத்தை  பணநாயகம் கொண்டு  மாற்ற நினைக்கும்  சக்திகளை 
வீழ்த்துவோம்.  
பின்குறிப்பு:  இப்படி  அனாமத்தாக  கிடைக்கும்  பணத்தையெல்லாம் 
பறிமுதல் செய்வதால்தான்  தமிழக முதல்வர்  பதட்ட்மடைகின்றாரா? 
அவசர நிலைக்காலம்  என்று  மிரட்டுகின்றாரா ? 


கைப்பற்றப்பட்ட ஐந்து கோடி ரூபாய் -
படம் நன்றி ஹிந்து நாளிதழ்

No comments:

Post a Comment