Tuesday, May 10, 2011

எலிக்கும் எரிதழலுக்கும் இரையாய் நாங்கள் !

ஒவ்வொரு நெல் மணியிலும் 
அதை உண்பவன் பெயர் 
இருந்திடுமாம்!


ஏதோ  ஒரு நூலில் 
இப்படியாய்
எழுதப்பட்டுள்ளதாம்.


மக்கள் பசியாற 
படைக்கப்பட்டோம்  
என்ற பெருமையில் 
பிறந்தோம். 


மூட்டைகளில் அடைபட்டு
கிடங்குகளில் புழங்கிய போதும்
நமக்கான காலம் வரும் 
என்றே நம்பிக்கையாய் 
காத்திருந்தோம்.


எம் குலத்தவரையெல்லாம்
எலிகள்    புசித்தபோது 
அப்படியேனும்  என் 
படைப்பின்  நோக்கம் 
பூர்த்தியாய் போகும் 
என பொறுத்திருந்தேன்.


கிடங்கிலிருந்து   நானும்
வெளியே  வந்தேன்,
எரியும்  நெருப்பிற்கு 
இரையாக. 


ஒரு வேளை  உணவின்றி
தவிப்பவரா நீர்? 
உந்தன் அரசு 
என்றுமே  உமக்களித்த
பரிசு 
பட்டினிதான். 


எலியாய்  மாறி விடு!
எரியும் நெருப்பாய் 
எழுந்திடு! 


அப்போதேனும் 
ருசி பார்ப்பாய் 
நெல் என்றால் 
என்னவென்று! 


(பஞ்சாபில்  எரிக்கப்பட்ட   நெல் மூட்டைகளின்  வேதனைக் குரல்)
 


   

 

No comments:

Post a Comment