Saturday, May 14, 2011

ஓய்வெடுங்கள் கலைஞரே, ஆனால் கதை வசனம் மட்டும் வேண்டாம்!





தமிழக  மக்கள்  தனக்கு நல்ல ஒய்வு அளித்து விட்டதாக  கலைஞர் 
கூறியுள்ளார். நன்றி  மறந்தவர்கள், நம்பிக்கை துரோகிகள், 
சோற்றால்  அடித்த  பிண்டங்கள், ஆட்டு மனதைக் கூட்டம்  என்றெல்லாம் 
வசை பாடாமல்  இந்த அளவிற்கு  நிறுத்திக் கொண்டதற்கு  நன்றி. பின்னர்
கடிதங்களில்  கடுமையான  வாசகங்கள்  வரத்தான் போகிறது. அது வேறு 
விஷயம். 


மரியாதைக்குரிய கலைஞர் அவர்களே, மக்கள் அளித்த ஒய்வு நேரத்தை
உங்கள் குடும்பத்துடன்  செலவழியுங்கள், பஞ்சாயத்து செய்வதற்கும் 
பைசல் செய்வதற்கும்  பாவம் ஏராளமான  பிரச்சினைகள்  வேறு  
உள்ளது.  


இந்த ஓய்வைப் பயன்படுத்திக்கொண்டு   தயவு செய்து  திரைப்படங்களுக்கு   கதை வசனம்  எழுத புறப்பட்டு  விடாதீர்கள். 
உங்கள்  பேரன்கள்  யாருமே  உங்கள்  கதை வசனத்தை  வைத்து படம்
எடுக்காத போது  புதிதாக  யாரும்  இனி வரப்போவதில்லை.  


அப்படி  நீங்கள்  துணிந்து  வந்தால் இப்போது கிடைத்த   இருபத்தி இரண்டு
இடம்  கூட  இனி கிடைக்காது.    



3 comments:

  1. உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருப்பின் பார்க்கவும் ...

    அதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி

    ReplyDelete
  2. உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருப்பின் பார்க்கவும் ...

    அதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி

    ReplyDelete
  3. உங்கள் கட்சி மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் படுதோல்வி அடைந்துள்ளதே,அது பற்றி வாய் திறக்கவே இல்லையே. அதை முதலில் எழுதுங்கள், புத்ததேவ்எப்படி ஓய்வேடுக்கப்போகின்றார் என்று முதலில் எழுதுங்கள். கலைஞர் பற்றி பிறகு எழுதலாம்

    ReplyDelete