Thursday, June 23, 2011

கிழிக்கப்பட்ட பக்கங்கள்

நேற்று  தீக்கதிரில்  படித்த  ஒரு சுவாரஸ்யமான  ஒரு செய்தி. 
அரசு அமைக்கும் குழுக்கள்  செயல்படும்  லட்சணங்கள் பற்றியது. 
கல்வியாளர் திரு ராஜகோபாலன்  அவர்கள் ஒரு அனுபவத்தை 
பகிர்ந்து கொண்டுள்ளார். முன்பு மத்தியரசு  ஒரு ஆணையிட்டதாம். 
பாடப்புத்தகங்களில்  மூன்றில்  ஒரு பகுதியை குறைக்க வேண்டும் 
என்று. தமிழக அரசு அமைத்த குழுவின்  பரிந்துரை என்ன தெரியுமா? 

ஒவ்வொரு புத்தகத்தின்  மூன்றாவது பக்கத்தையும் கிழித்து விடுவது.
முதல் பக்கத்தின் தொடர்ச்சியாக  இருந்தாலும் கவலையில்லை, 
முக்கியமான பாடமாக இருந்தாலும் கவலை இல்லை.  ஒவ்வொரு மூன்றாவது  பக்கமும்  தேவையில்லை.  அவ்வளவுதான். 

தான் கடுமையாக ஆட்சேபித்ததால்  கணக்கு புத்தகம் மட்டும் 
தப்பியது, தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொண்டு புதிய
புத்தகம் தயாரிக்கப்பட்டது, மற்ற பாடங்களில் மூன்றாவது    
பக்கங்கள் போனது போனதுதானாம். 

 

No comments:

Post a Comment