Tuesday, October 11, 2011

கலைஞருக்கு ஒரு சூடான கேள்வி



வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும்  
தோழர் ஜி.லதா (குடியாத்தம் தொகுதியின் முன்னாள் 
சட்ட மன்ற உறுப்பினர்) அவர்களுக்கு ஆதரவாக 
இன்று  வேலூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில்
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் 
தோழர் ஜி.ராமகிருஷ்ணன்  அவர்கள்  கலைஞரிடம்
கேட்ட  ஒரு கேள்வி.
" நில அபகரிப்பு வழக்கு  என்று மாநில அரசு முன்னாள்
அமைச்சர்களை கைது செய்வது பழி வாங்கும் நடவடிக்கை
என்றால், உங்கள் கட்சி பங்கேற்றுள்ள, உங்கள் மகன் 
அழகிரி அமைச்சராக உள்ள மத்தியரசு, உங்கள் மகள் 
கனிமொழியை கைது செய்து டெல்லி சிறையில்  
அடைத்துள்ளது. உங்கள் கட்சியின் முன்னாள் மத்திய
அமைச்சர் ஆ. ராசாவையும் டெல்லி சிறையில் 
அடைத்துள்ளது. உங்கள் பேரன்கள்  வீட்டில்  சி.பி.ஐ
சோதனை செய்துள்ளது. 


இதையெல்லாம் ஏன் மத்திய  அரசின்  பழி வாங்கல் 
நடவடிக்கை என்று  கூறுவதில்லை. அப்படியானால் 
அவை எல்லாம் நியாயமானது  என்று 
ஒப்புக் கொள்கின்றீர்களா? 


இதற்கு கலைஞர்  என்ன பதில் சொல்லப் போகின்றார்?

3 comments:

  1. இப்படியெல்லாம் கேட்டால் நான் மனித சங்கிலி போராட்டம், இரண்டுமணிநேர உனாவிரதம் போன்ற போராட்டங்கள் நடத்த வேண்டி வரும் ஜாக்கிரதை.

    - இப்படக்கு தமிழினத் தலைவர்

    ReplyDelete
  2. சி பி ஐ, உச்ச நீதி மன்றம் என்பவை மத்திய அரசைத் தாண்டிச் செயல் படுவது வேறு,

    தமிழ்நாட்டுக் காவல் துறை எடுப்பார் கைப்பிளளை !

    ReplyDelete
  3. உச்ச நீதிமன்றம் மத்திய அரசிற்கு அப்பாற்பட்டு
    செயல்படுவது என்பது சரி. சி.பி.ஐ மத்திய
    அரசின் எடுபிடிதான். நம்பிக்கை வாக்குப்
    பின்பு மாயாவதி வழக்கை திரும்பப்
    பெற்றது, போபோர்ஸ் வழக்கில்
    க்வோட்ரோஷியை தப்ப வைத்தது யார்?

    ReplyDelete