Wednesday, January 11, 2012

ஜெ வுக்கு பாராட்டுக்கள், நிசமாத்தாங்க, நக்கல் இல்லை




தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உண்மையிலேயே மனப்பூர்வமான பாராட்டுக்கள். விரிவு படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அவர் இன்று துவக்கி வைத்துள்ளார். இத்திட்டத்தை செயல்படுத்தப் போவது பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனமான யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி என்பதுதான் இதில் சிறப்பம்சம்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனமான ஸ்டார் இன்சூரன்ஸ் வசம் ஒப்படைத்திருந்தனர். அதை பொதுத்துறை நிறுவனங்களில் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் கண்டு கொள்ளவேயில்லை. ஸ்டார் நிறுவனத்தின் குளறுபடிகள் பற்றியும் அவர் கவலைப்படவேயில்லை. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எவ்வளவோ முறை எத்தனையோ முறையில் கோரிய போதும் அது செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. ஸ்டார் நிறுவனம் பலன் அடைய வேண்டும் என்பதால் வந்ததல்லவா கலைஞர் காப்பீட்டுத் திட்டமே!

கலைஞர் போல தனியார் நிறுவனத்திடம் மருத்துவக் காப்பீட்டை ஒப்படைக்காமல் அரசு நிறுவனத்திடம் ஒப்படைத்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. சேவை என்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட பொதுத்துறை நிறுவனம் வசம் இத்திட்டம் செல்வது மக்களுக்கும் மிக மிக நல்லது.

மக்களின் பணம் மக்களுக்கே வந்து சேர்கின்றது.

No comments:

Post a Comment