Tuesday, January 17, 2012

ராஜா ராஜாதான், எதிரே நிற்க யாருமில்லை



 ஜெயா டிவியில்  இளையராஜாவின்  இசை நிகழ்ச்சி ஒரு 
அற்புதமான, பரவச அனுபவம் அளித்தது.

முதல் நாள்  தொலைக்காட்சி கிடைக்கவில்லை.
நேற்று  மின்சாரம் இல்லை.
இரண்டும் சேர்ந்து  இன்றுதான் கிடைத்தது.

காலத்தில் நிற்கும் எண்ணற்ற பாடல்களைப் படைத்த
இசை மேதை நிச்சயமாக  ராஜாதான். ராஜாவின் 
சாம்ராஜ்யம்  நிச்சயமாக  இசைக்கு ஒரு கொடைதான்.

அப்பா! எத்தனை கலைஞர்கள், வயலின், தாள வாத்தியக்
கலைஞர்கள் , குழு இசைப்  பாடகர்கள் என்று  மிகப் 
பெரிய படை. அதிலே எஸ்.பி.பி, யேசுதாஸ், சித்ரா 
போன்றவர்கள் தளபதிகள்.

தொழில்நுட்ப இரைச்சலில் கொலை வெறிகள் 
கூத்தாடலாம். அதே வேகத்தில்  காணாமலும் 
போய் விடும். ஆனால் அழியாவரம் பெற்றவை 
ராஜாவின் பாடல்கள். 

வாழ்வில் தாங்க இயலாத சோகத்தை  சுமந்து
கொண்டு புன்னகையோடு  சித்ரா பாடியது
நெகிழ்ச்சியை தந்தது.

பாலு, தாஸ், ராஜா என்று மூன்று சிகரங்கள் 
மேடையில் ஒன்றாக தோன்றிய காட்சியே 
என்றும் மனதில் நிலைத்திருக்கும்

ராஜா என்றென்றும் இசை ராஜாதான்.
       

1 comment:

  1. Rightly said!. Maestro is Maestro. I love his music like nothing else. LONG LIVE OUR MAESTRO!

    ReplyDelete