Sunday, April 1, 2012

இனி எந்த எம்.எல்.ஏ வும் செத்துப் போகக்கூடாது.

இன்று  தமிழகத்தின்  எல்லா தொகுதி மக்களும் ஆசைப்படுவது,
நம்ம தொகுதி  எம்.எல்.ஏ எப்ப செத்துப் போவாரு, எப்ப இடைத்தேர்தல்
வரும் என்பதைத்தான். இதற்கான காரணமெல்லாம் தெரியுமுல்ல?

இது தெரியாதவங்கல்லாம் தமிழ்நாட்டில இருக்கவே லாயக்கில்லாத
ஆளுங்க, அதனால வேற ஏதாவது சினிமா கிசுகிசு படிக்க போயிடுங்க,
 


ஆனால்  என்னோட பயமே வேற,

உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அம்மா கட்சிக்கு மக்கள் அமோகமா
வோட்டு போட்டாங்க, நல்லவங்களா மக்கள் இருக்காங்களே 
அப்டினு, பால் விலையை ஏத்தினாங்க, பஸ் கட்டணத்தை
ஏத்தினாங்க, அந்த காலத்துல எல்லாரும் கரண்டோடயா
பிறந்தாங்க, வாழ்ந்தாங்க, உங்களுக்கு மட்டும் எதுக்குடா
கரண்டு னு கட் பண்ணிக்கிட்டே  இருக்காங்க. . .

அப்படியும் கூட சங்கரங்கோவில் மக்கள் அம்மாவுக்குத்தான்
வோட்டு போட்டாங்க, எதுத்து நின்னவனெல்லாம் துண்டைக்
காணோம், துணியக் காணோம் னு ஓடற மாதிரி ஓட்டு
போட்டாங்க.

அம்மா அப்பத்தான் முடிவு பண்றாங்க, எவ்வளவு அடிச்சாலும்
தாங்கறானே. இவன மறுபடியும் நல்லா அடிப்போம்னு 
கரண்ட் சார்ஜ ஏத்திட்டாங்க, 

அடுத்து எந்த எம்.எல்.ஏ  வாவது செத்துப் போய் இடைத்தேர்தல்
வந்தாலும் காசா கொட்டுவாங்க, மந்திரிங்க வீடு வீடா போவாங்க,
ராகுல் காந்தி குடிசைக்கு வந்து கஞ்சி குடிச்சா  வோட்ட கரெக்ட்
பண்ணலாம்னு  நினச்சது வேணா நடக்காம போயிருக்கலாம்.
ஆனா நம்ப ஆளுங்க உஷார் பார்ட்டிங்க, கள்ள ஓட்டு போட்டாவது
ஜெயிக்காம விட மாட்டாங்க. . .

அடுத்த தேர்தல்யும் அம்மா ஜெயிச்சா என்னாகும்?

இனிமே விலையேத்த எதுவுமில்ல.

அதனால தமிழ்நாட்டு ஜனங்களெல்லாம் தற்கொலை
பண்ணிக்கிட்டு  சாவுங்கடா னு  சொல்லிடுவாங்க.

அதுக்காக 

விலையில்லா விஷம்,
விலையில்லா தூக்கு கயிறு  

எல்லாம்
கொடுப்பாங்க. .

தேவையா இதெல்லாம்.

அதனால உங்க ஊர் எம்.எல்.ஏ நோய் நொடியில்லாம
ஐந்து வருஷம் பதவியில நீடிக்கனும்னு கடவுள
வேண்டிக்குங்க . . .
 
 

3 comments:

  1. காலையில் இந்த பதிவை எழுதும் போது சிறிதும்
    எதிர்பாராத நிகழ்வு நடந்து விட்டது. புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட்
    கட்சியின் தோழர் எஸ்.பி.முத்துக்குமரன், சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார் என்ற செய்தி
    உண்மையில் மிகவும் வேதனையளிக்கிறது. அவரது
    குடும்பத்தினருக்கும் அவரது இயக்கத்திற்கும்
    ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  2. அதுக்குள்ளே நடக்கக்கூடாதது நடந்துடுச்சே .....

    ReplyDelete
  3. It is unfortunate

    ReplyDelete