Monday, July 23, 2012

இந்தியாவின் வீரப் புதல்வி



























இன்று மறைந்த மகத்தான வீரங்கனை
கேப்டன் லட்சுமி அவர்களுக்கு 
செவ்வணக்கம்.

கரண்டிகள் மட்டுமே பெண்களுக்காய்
ஒதுக்கப்பட்ட காலத்தில் ஸ்டெத்தெஸ்கோப்
பிடித்தவர்.

ஸ்டெத்தெஸ்கோப்  ஏந்திய கரங்கள்
அன்னை இந்தியாவின் விலங்குகளை
அறுத்தெரிய துப்பாக்கி ஏந்தியது. 
போர் முனைக்கு அழைத்துச் சென்றது.
சிறைச்சாலையும் அவருக்கு இனிமையான
அனுபவமாகவே இருந்தது.

மருத்துவராக அவர் ஆற்றிய பணியும்
மகத்தானது. கான்பூரில் பணியாற்றி 
இப்போது வேலூரில் என்னோடு 
பணியாற்றும் தோழர் முருகேசன் சொன்னார்.

என் முதல் பையனுக்கு பிரசவம் பார்த்தது
அவர்தான். இனிமையான டாக்டர். ஒரு ரூபாய்
மட்டுமே கட்டணம் வாங்குவார். அறைக்கான
கட்டணம் அது. ஏழை மக்களுக்கு அதுவும்
கிடையாது. 

கான்பூரில் எங்களின் அகில இந்திய மாநாடு
நடைபெற்ற போது அதிலே கலந்து கொண்டார்.
அந்த வீராங்கனையைப் பார்த்த போதே
சிலிர்த்துப் போனது.

மாநாட்டிற்கு வந்த எங்கள் கோட்டத் தோழர்கள்
நால்வர் அவர்கள் வீட்டிற்கு சென்று சந்தித்து
விட்டனர். அன்று இரவு முழுதுமே உறங்காமல்
அந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதிலே ஒரு தோழர் அந்த சந்திப்பை உணர்வு
மிக்க கவிதையாக்கினார். அது எங்கள் சங்கச்சுடரிலும்
வெளியானது.

இன்னொரு தோழர், தனது மகளுக்கு தோழர் லட்சுமியின்
மகளின் பெயரையே வைத்தார், சுபாஷினி என்று.

அவரது வீரம் இறுதி வரை தொடர்ந்தது.
குடியரசுத்தலைவர் தேர்தலில் தோற்போம் என்று
தெளிவாக தெரிந்தும் அது தனது அரசியல் கடமை
என்று தைரியமாக போட்டியிட்டார்.

செவ்வணக்கம் கேப்டன் லட்சுமி

(மேலே உள்ள படம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்
சங்கத்தின் கான்பூர் மாநாட்டில் எடுக்கப்பட்டது)

No comments:

Post a Comment