Wednesday, August 15, 2012

என்ன தேசம் இது?



என்ன  தேசம் இது?
எதைத் தொட்டாலும் ஊழல்,
எங்கு பார்க்கினும் ஏழ்மை,
சுயநலத்தில் மூழ்கிப்போன 
ஆட்சியாளர்கள்,
அவர்களின் அடியொற்றி
நடக்கும் அதிகார வர்க்கம்,
உரிமை இழக்கிறோம் என்ற
உணர்வற்ற மக்கள்,
உண்மையைச் சொல்பவர்களை
கிண்டல் செய்யும் ஊடகங்கள்,
என்ன தேசம் இது?
என்று கோபம் வந்தாலும்
எந்தன் கோபத்தை
எடுத்துரைக்கும் உரிமையை
மேற்கு வங்கம் நீங்கலாக
நாடு முழுமைக்கும்
கொடுத்துள்ள 
சுதந்திரத் திருநாடு.
சுதந்திரத்தை போற்றுவோம்,
சுதந்திரத்தை பாதுகாப்போம்.

2 comments:

  1. சுதந்திரதின வாழ்த்துக்கள்...
    நல்ல பதிவு... நம்ம பதிவுக்கும் வாங்க...
    http://varikudhirai.blogspot.com

    ReplyDelete