Thursday, August 9, 2012

தா.பாண்டியன் நிசமாலுமே ஒரு கம்யூனிஸ்டா?

இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளிவந்த இக்கடிதத்தை படிக்கும்
போது எனக்கு இந்த சந்தேகம்தான் வந்தது. இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநிலச் செயலாளர் என்ற பொறுப்பில் அவர் இருந்த
போதும் அவரது பேச்சும் நடத்தையும் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளரை
விட மோசமாகத்தான் உள்ளது.


மார்க்சிஸ்ட் கட்சியை வசைபாடுவது, மார்க்சிஸ்ட் கட்சியின்
இயக்கங்களை சிறுமைப்படுத்துவது என்பது மட்டும்தான்
இவரது பிழைப்பாக மாறி விட்டது. இவரைப் போல
லாவணி பாட வேண்டிய அவசியமில்லை என்று மார்க்சிஸ்ட்
கட்சி பொறுப்புணர்வோடு இருப்பதால் ஆட்டம் அதிகமாகிவிட்டது.
ஓடிப் போய் திரும்பி வந்தவரை மாநிலச் செயலாளராக ஏற்றுக்
கொண்ட அந்த கட்சி மீதுதான் பரிதாபம் ஏற்படுகின்றது. 


தா.பாண்டியனுக்கு உத்தப்புரம் தலித் மக்கள் திறந்த மடல்

மதுரை, ஆக. 8 -

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் கவுன்சில் செய லாளர் தா.பாண்டியன் அவர்களுக்கு உத்தப்புரம் தலித் மக்கள் சார்பில் கே.பொன்னையா, எஸ்.சங்கர லிங்கம் ஆகியோர் எழுதியுள்ள கடிதம் வருமாறு:மரியாதைக்குரிய தோழர் தா. பாண்டியன் அவர்களுக்கு, மதுரை மாவட்டம், உத்தப்புரம் தலித் மக்க ளின் சார்பிலும், போராட்டத்தில் முன்னின்றவர்கள் என்ற முறை யிலும் தோழமையுடன் எழுதும் கடிதம் :4-8-2012 அன்று புதிய தலை முறை தொலைக்காட்சியின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் தங்களின் நேர்காணல் நிகழ்ச்சியைப் பார்த்தோம். அந்நிகழ்ச்சியில் உத்தப்புரத்தில் இருக்கும் சுவர் தீண்டாமைச்சுவரே இல்லை, இருதரப்பு மக்களும் விரும்பிக் கட்டிக் கொண்டது என்று நீங்கள் பேசியது எங்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.1989-ல் கட்டப்பஞ்சாயத்து மூலமாக எங்களை நிர்ப்பந்தப் படுத்தி கட்டப்பட்டதே தீண் டாமைச்சுவர் என்பதை அதில் கை யெழுத்திட்டவர்கள் என்ற முறை யில் மீண்டும், மீண்டும் நாங்கள் தெரிவித்து வருகிறோம். அதை நீதி மன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. நீதியரசர் சந்துரு அவர்கள் அளித்த தீர்ப்பில் உத்தப்புரத்தின் தீண்டா மைக் கொடுமைகள் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. தற் போது நிலைமையில் மாற்றம் ஏற் பட்டுள்ள பின்னணியில் எங்கள் கிராமத்து இதர சமூக மக்களும் கூட ஏற்றுக்கொண்ட உண்மை தான் இது. 

நீங்கள் மட்டும் ஏற்க மறுப்பது நியாயமா? நாங்கள் விரும்பி கட்டிக் கொண்ட சுவர் என் றால், அதற்கு எதிராக இத்தனை தாக்குதல்களையும் சந்தித்துப் போராட்டங்களை நடத்தியிருப் போமா? பாரம்பரியமாக நாங்கள் வழிபாடு நடத்திய முத்தாலம்மன் கோவில், அரசமர வழிபாடு உரிமை பறிக்கப்பட்டது. பொதுப்பாதையில் சுவர் எழுப்பி, பொது வீதியில் நட மாட்டம் தடை செய்யப்பட்டது. கிராமத்தின் கழிவு நீரனைத்தும் எங்கள் தெரு பக்கமே திருப்பி விடப் பட்டது. இத்தனையையும் சகித்துக் கொண்டுதான் வாழ்ந்தோம். இப்படியான சூழ்நிலையில் தான் பிப்ரவரி 10-ம் தேதி தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் கள ஆய்வுக்குழுவினர் எங்கள் கிராமத்திற்கு வந்தார்கள். தீண்டாமைச்சுவரை வெளி உல கிற்கு கொண்டு வந்தார்கள். சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் என். நன்மாறன் பிரச்சனையை சட்ட மன்றத்தில் எடுத்துரைத்தார். தீண் டாமைச்சுவரை அகற்றக் கோரி 2008 ஏப்ரல் 22-ல் பேரையூர் தாலுகா அலுவலகம் முன்பு முதல் போராட்டம் சிபிஎம் மற்றும் தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்றது. உத்தப்புரத்தில் இருந்து 500 பேர் சென்றிருந்தோம். எங்களுக்கு ஆதரவாக சுமார் 2000 சிபிஎம் தோழர்கள் பி.சம்பத், பி. மோகன் எம்.பி., என்.நன்மாறன் எம். எல்.ஏ., ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்கள். இப்படியும் ஒரு கட்சியா என்று அதிசயித்து மகிழ்ந்து போனோம்.தீண்டாமைச்சுவரை தகர்த்திட நடைபெறும் போராட்டத்திற்கு வலு சேர்க்க 2008 மே 7-ம் தேதி தோழர் பிரகாஷ் காரத் உத்தப்புரம் வருகிறார் என சிபிஎம் தலைவர் என். வரத ராஜன் அறிவிக்கிறார். அவ்வளவு தான், மே 6ம் தேதியே சுவரின் ஒரு பகுதியை இடித்து வழி ஏற்படுத்திக் கொடுத்தது அரசு நிர்வாகம். இருபது ஆண்டுகால தீண்டாமைச்சுவர் இரண்டு மாதகால சிபிஎம் தலைமையிலான போராட்டத்தால் தகர்க்கப்பட்டது. மறுநாள் அறிவித்த படியே தோழர் பிரகாஷ் காரத் உத்தப் புரத்திற்கு வருகை தந்தார். 

ஊர் திரண்டு வரவேற்றோம். சுவரின் வெளிப்பாடு, அதன் தகர்ப்பு, தோழர் பிரகாஷ் காரத் வருகை ஆகியவற் றால் உத்தப்புரம் உலகின் கவனத் தைக் கவர்ந்தது.உற்சாகம் மேலிட மீதமிருக்கிற தீண்டாமையின் வடிவங்களையும் முடிவுக்குக் கொண்டு வர தொடர் போராட்டங்களை நடத்தினோம். போராட்டங்களை ஒடுக்க காவல் துறை தன் வழியில் செயல்பட்டது. எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து தலித் மக்கள் மீதும் வழக்கு உள்ளது. சிறையும், ஜாமீனும் வழக்கமாகிப்போனது. 2008 அக் டோபர் 2-ம் தேதி எங்கள் குடியிருப் பிற்குள் புகுந்த காவல்துறை எங்க ளின் சொத்துக்களை சேதப்படுத்தி யது, நியாயம் கேட்டு ஜனநாயக மாதர் சங்கம் வழக்கறிஞர் உ. நிர்மலா ராணி மூலமாக நீதிமன்றம் சென்றது. சென்னை உயர்நீதிமன் றத்தின் மதுரைக்கிளை, பாதிக்கப் பட்ட எங்களுக்கு ரூ.10.28 லட்சம் நிவாரணம் வழங்கியது. எனினும் கோரிக்கைகள் நிறைவேறவில் லை. தொடர்ந்து போராடினோம். 2010 ஜூலை 12-ம் தேதி மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு பேச்சு வார்த்தைக்கு சென்ற தோழர் டி.கே. ரங்கராஜன் எம்.பி, உள்ளிட்ட சிபிஎம் தலைவர்களையும் காவல் துறை தடிகொண்டு தாக்கியது. பெண்கள் உட்படப் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.2011 ஜனவரி 30-ம் தேதி முத் தாலம்மன் கோவில் வழிபாடு செய் வது என முடிவு செய்தோம். எங்க ளுக்கு ஆதரவாக மதுரையில் இருந்து புறப்பட்ட தோழர் ஜி.ராமகிருஷ் ணன் உள்ளிட்ட தலைவர்களை காவல்துறை கைது செய்தது. 144 தடையை மீறி உத்தப்புரம் வந்த கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்டவர் களையும், எங்களையும் காவல் துறை கைது செய்தது.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக் காக 2008 முதல் போராடி வரு கிறோம். விவரிக்க முடியாத இழப்பு களையெல்லாம் இக்காலத்தில் சந்தித்தோம். ஆனால் இழப்புக ளின்றி போராட்டமில்லை, போராட்டமின்றி வாழ்க்கையில்லை என்பதை உணர்ந்து கொண்டோம் நாங்கள். ஆனால் நீங்களோ எங்கள் போராட்டம் முழுவதையும் தேவை யற்றது என சிறுமைப்படுத்தி விட் டீர்கள் என்பதுதான் எங்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.இதே சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் நாங்கள் நடத்திய உறுதியான போராட்டங்களும், மதுரை மாவட்ட அப்போதைய காவல்கண்காணிப் பாளர் அஸ்ரா கார்க் அவர்களின் சட்டப்பூர்வமான அணுகுமுறையும் ஏற்படுத்திய மனமாற்றத்தால் சுமூக மான உடன்பாடு ஒன்று 2011 அக் டோபர் 20-ல் ஏற்பட்டு அதன்படி நவம்பர் 10-ம் தேதி 20 ஆண்டு களுக்குப் பிறகு முத்தாலம்மன் கோவிலில் வழிபாடு செய்தோம். நிழற்குடையும், கழிவுநீரை திருப்பி விடும் பணியும் நடைபெற்று வரு கிறது. 2008-ல் திறந்து விடப்பட்ட பாதையில் வாகனம் செல்ல மட்டும் தற்போதும் தடை நீடிக்கிறது.

இதுதான் உண்மை. தீண் டாமைப் பிரச்சனைகளுக்கு எதி ராக உங்கள் கட்சி என்ன செய்தது? என்று உங்களை நோக்கி நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு உங்களின் நிலைபாட்டை சொல் வதற்கு மாறாக, சமூக நீதிக்கான எங்கள் போராட்டத்தை சிறுமைப் படுத்துவது நியாயம் அல்ல. தோழர் பி. ராமமூர்த்தியும்,கே,பி. ஜானகியம்மாவும் என்ன செய் தார்கள் என்று கேட்டிருக்கிறீர்கள். தோழர் ராமமூர்த்தியின் மறைவுக் குப் பிறகுதான் (1987) இந்தத் தீண் டாமைச்சுவர் 1989-ல் கட்டப் பட்டது. 1992ல் காலமான ஜானகி யம்மா தனது முதுமை காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் அது. அவர்கள் செயல்பாட்டுடன் இருந்த வரை, எல்லா கொடுமைகளையும் எதிர்த்துப் போராடினார்கள் என்பது அரசியல் வரலாறு.இந்தச் சூழ்நிலையில் இடது சாரிகள் என்ற முறையில் நீங்களும், உங்கள் கட்சியும் சமூக நீதிப்போர் களத்தில் இணைவதனால் எங்க ளைப் போன்ற ஒடுக்கப்பட்ட மக் களுக்கான விடுதலை மிக விரைவில் சாத்தியமாகும் என நம்புகிறோம்.

நன்றி - தீக்கதிர் நாளிதழ் 09/08/2012

2 comments:

  1. To expect fairness from D.Pandian is like expecting fairness from P.Chidambaram and IMF. Those who say they are not abetting Thali MLA, Ramachandran, were present in large numbers in the court hearing. The dividing line between Congress and CPI is fast disappearing. Please do not call CPI a left party hereafter.

    ReplyDelete
  2. Dear anonymous! D.Pandian is D.pandian. That is all. C.P.I. is undoubtedly a left party !---kaashyapan

    ReplyDelete