Saturday, October 13, 2012

எதுக்குடா தவணை ? எல்லா எழவையும் ஒன்னா சொல்லித் தொலையேன்



 இனி ஆட்சிக்கு வரப்போவதில்லை, இருக்கும் காலத்திலேயே
எல்லாவற்றையும் அழித்து விட்டுப் போவோம் என்று முடிவு
செய்து ஒன்றன் பின் ஒன்றாக தாக்குதல் நடத்தும் மன்மோகன்
வகையறாவின்  லேட்டஸ்ட் தாக்குதல் சர்க்கரை.

முதலாளிகள் வாழ கரும்பு விவசாயிகளும் நுகர்வோரும்
சிரமப் படப் போகின்றார்கள்.

இதோ முழு விபரம் அறிய தீக்கதிர் நாளிதழில் வந்துள்ள
செய்தியை படியுங்கள்.

ஏன் தவணை முறை?

எல்லா எழவையும் ஒரே நாளில் சொல்லித்
தொலைக்க வேண்டியதுதானே?





விலை நிர்ணய அதிகாரத்தைக் கைவிடுகிறது மன்மோகன் அரசு
ரேசன் சர்க்கரை இனி இல்லை

 
புதுதில்லி, அக். 12 -பெட்ரோலுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத் தை கைவிட்டதைப்போல, சர்க்கரை விலையையும் நிர்ண யம் செய்யும் அதிகாரத்தை அரசு கைவிட வேண்டும் என்று பிரதமரின் பொருளா தார ஆலோசனைக்குழு, நாட்டு மக்களின் வாழ்வை நாசமாக்கும் மற்றுமொரு யோசனையை தெரிவித் துள்ளது.வெளிச்சந்தையில் சர்க்கரை ஆலைகளே தங்கள் இஷ்டம் போல் விலை நிர்ணயம் செய்து சர்க்கரையை விற்றுக்கொள்ள தாராள அனுமதி அளிக்க வேண்டும் என்று இக்குழு பரிந்துரைத்துள்ளது. இப்பரிந் துரையை ஏற்று, சாமானிய மக்கள் எவரும் எளிதில் வாங்க முடியாத அளவிற்கு சர்க்கரை விலை உயர்வதற்கு மன் மோகன் சிங் அரசு ஆவன செய்யுமெனத் தெரிகிறது. 

தனியார் சர்க்கரை ஆலை கள் தற்போது தாங்கள் உற் பத்தி செய்யும் சர்க்கரையில் 10 சதவீதத்தை அரசுக்கு வெளிச் சந்தை விலையை விட குறை வாக ‘லெவி’ என்ற பெயரில் வரியாக அளித்து வருகின்றன. இந்த சர்க்கரையே மானிய விலையில் ரேசன் கடைகளில் ஏழை - எளிய மக்களுக்கு விநி யோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் சர்க்கரை ஆலைகள் அரசுக்கு ‘லெவி’ செலுத்தும் இந்த முறையை முற்றிலும் ஒழித்துக் கட்டவும் மேற்கண்ட குழு பரிந்துரைத்துள்ளது. 

பிரதமர் மன்மோகன் சிங் கால் நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவர் சி. ரெங்கராஜன், இதுதொடர் பாக அரசுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட பரிந்துரைகளை செய்திருக் கிறார்.

“கரும்புக்கு விலை நிர்ண யம் செய்வதை சர்க்கரை ஆலைகளிடமே விட்டுவிடு வது; சர்க்கரை வர்த்தகத்தை முற்றிலும் தாராளமயமாக்கு வது ஆகிய இரண்டு முக்கிய நடவடிக்கைகளை ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் அரசு செய்ய வேண்டும். இதை ஒவ்வொன் றாக அறிமுகப்படுத்தலாம். எனினும், தனியார் சர்க்கரை ஆலைகள் அரசுக்கு லெவியாக சர்க்கரையை அளிப்பது என்ற நடைமுறையும், வெளிச்சந்தை யில் விற்கப்படும் சர்க்கரையின் விலையை அரசாங்கமே தீர் மானிப்பது என்ற நடை முறையும் உடனடியாக ஒழிக் கப்பட வேண்டும்” என்று சி.ரெங்கராஜன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரத் தின் அனைத்து துறைகளுமே கிட்டத்தட்ட அகலத் திறந்து விடப்பட்டுவிட்டன; இந் நிலையில் சர்க்கரை வர்த்தகம் அரசாங்கத்தின் கட்டுப் பாட்டிலேயே நீடிப்பது சரியல்ல என்று பொருளாதார ஆலோசனைக் குழு மிகவும் வருத்தப்பட்டு கூறியிருக்கிறது. சி.ரெங்கராஜன் குழுவின் இந்த அறிக்கை வெள்ளியன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பிக்கப்பட்டது. சர்க் கரைத் துறையை முற்றிலும் தனியார்மயமாக்குவது, சர்க்கரை விலை நிர்ணயத்தில் அரசின் அதிகாரத்தை ஒழிப் பது ஆகியவை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை களை அளிக்குமாறு ரெங்கரா ஜன் தலைமையிலான 

இக்குழு வை கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மன்மோகன் சிங் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.“இந்தியாவில் கிட்டத் தட்ட அனைத்து துறைகளி லுமே சந்தையில் பொருள் களுக்கான கிராக்கியும் சப் ளையும் பொருத்தமான அள வில் இருக்கிறது. இந்நிலையில் சர்க்கரை சந்தையை மட்டும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை”என்று இக்குழுவின் அறிக்கை, தனது பரிந்துரை களை நியாயப்படுத்தியுள்ளது.

பொருளாதார சீர்திருத்தங் கள் என்ற பெயரில் பெட் ரோலியப் பொருட்களின் விலைகளை தாறுமாறாக உயர்த்தியுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, சில்லரை வர்த்தகம், இன்சூரன்ஸ், ஓய் வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்தையும் நாசமாக்கும் விதத்தில் முடிவுகளை அறி வித்துள்ளது. ஏற்கெனவே அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுதானியங்களின் விலை கள் மிகக்கடுமையாக அதி கரித்துள்ளன. சமையல் எரி வாயு, சாமானிய மக்களின் வீடு களிலிருந்து பறிக்கப்படும் அள விற்கு விலை உயர்த்தப்பட் டுள்ளது.

இந்நிலையில் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான சர்க் கரையின் விலையை கடுமை யாக உயர்த்தி, தனியார் பெரும் முதலாளிகள் கொள்ளை லாபம் அடிப்பதற்கு வழி செய் யும் விதமாக மேற்கண்ட பரிந் துரைகளை அரசு பரிசீலிக்கத் துவங்கியுள்ளது. ரேசன் கடை களில் இனி சர்க்கரை கிடைக் காது என்ற அபாய நிலை ஏற் படும். 

நன்றி - தீக்கதிர் நாளிதழ் 13.10.2012

2 comments:

  1. சாமான்யன் குரல் என்று கூறி கொண்டு ஜெவின் ஆட்சி பற்றி எதுவுமே சொல்வதில்லை.
    உங்களுக்கு சாமான்யன் பிரச்சினை தெரியவில்லை என்ற வேறு காரணம் உண்டு.

    ReplyDelete
  2. யாருப்பா அது? ஜெ ஆட்சி பற்றி எதுவுமே எழுதவில்லை என்று சொல்வது? இது வரை
    எழுதியுள்ளதையெல்லாம் ஒழுங்காப் படிச்சுட்டு
    அதுக்குப் பிறகு கமெண்ட் போடு.

    வர வர இந்த அனானிங்க தொல்லை
    தாங்க முடியல...

    ஓ அவனா நீ?

    போலிப் பெயர் எதுவும் கிடைக்காம அனாமதயம்
    ஆயிட்டியா

    ReplyDelete