Sunday, October 14, 2012

எத்தனை பேரை அவர்களால் கொல்ல முடியும்?




























தாலிபன் கூட்டம் இதனை கண்டிப்பாக எதிர்ப்பார்த்திருக்காது.
ஒரு ரோஜாவை வீழ்த்தினால் எல்லா மலர்களும் தானாகவே
வாடிப்போகும் என்ற அதன் கணக்கு தப்பாகிப் போனது.

பாகிஸ்தானில் தாலிபன்  கூட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள
ஸ்வாட் பகுதிஉய்ல் பெண்கள் வெளியே வரக்கூடாது, 
பள்ளிக்குச் செல்லக் கூடாது என்று போட்ட அடக்குமுறைக்
கட்டுப்பாட்டிற்கு எதிராக குரல் எழுப்பிய, எழுதிய
மாணவி  மலாலா வை தாலிபன் கூட்டம் துப்பாக்கியால்
சுட்டுள்ளது.

உயிருக்குப் போராடும் அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி
முழுமையாய் நலம் பெற வாழ்த்துவோம்.

அந்த மாணவிக்கு ஆதரவாக பாகிஸ்தான் முழுதும்
ஆதரவுக் குரல் எழுந்துள்ளது.

நாங்களும் மலாலாதான். எங்களில் எத்தனை பேரை
தாலிபனால் கொல்ல முடியும் என்று அவர்கள் 
கேட்கிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் தாலிபன் வெல்ல முடியாது.

பாகிஸ்தானில் தோன்றியுள்ள புதிய ஒளி இது.

4 comments:

  1. இஸ்லாம் மதத்தைத் திட்டியவர்கள் எங்கே போனார்கள்?

    http://arulgreen.blogspot.in/2012/10/I-am-Malala.html

    ReplyDelete
  2. இந்த பிஞ்சுகளின் குரல் தலிபான் போன்ற மிருகங்களுக்கு புரியாது. தலிபானின் கொலைகள் தொடரும் ..............

    ReplyDelete
  3. 'பாகிஸ்தானில் தாலிபன் கூட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்வாட் பகுதிஉய்ல் பெண்கள் வெளியே வரக்கூடாது, பள்ளிக்குச் செல்லக் கூடாது என்று போட்ட அடக்குமுறைக்
    கட்டுப்பாட்டிற்கு எதிராக குரல் எழுப்பிய, எழுதிய மாணவி மலாலா வை தாலிபன் கூட்டம் துப்பாக்கியால் சுட்டுள்ளது."

    ஐயா நீங்க இப்படி சொல்றீங்க, ஆனால் ஒரு மத பிரச்சாரகர் (சு.பி) தலிபான் தலைவர் பெண்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று சொன்னதாக புழுகி தள்ளியுள்ளார்.

    ReplyDelete
  4. குற்றம் இழைத்த தலிபான்கள் நமது வன்மையான கண்டனத்துக்குரியவர்கள்.
    இவ்விஷயத்தில் அநியாயத்துக்கு எதிராக பொங்கி எழுந்த பாகிஸ்தானியர்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
    குண்டு துளைக்கப்பட்ட சகோ.மலாலா உயிர் பிழைத்து உடல்நலன் தேறி வருதல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் நல்ல விஷயம்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.ராமன்.

    ReplyDelete