Sunday, October 21, 2012

ஜெ - கலைஞர் - இருவருமே புனிதர்கள் ???




 முகநூலில் சுமன் கவி என்பவர் 
எழுதியிருந்த 
சிறப்பான கவிதை.
அவருக்கு பாராட்டுக்களையும்
வாழ்த்துக்களையும் கூறி
இங்கே பதிவிடுகிறேன்.



இரு புனிதர்கள்

நிகழ்காலத்தில்  நீ செய்கிற 
ஒவ்வொரு தவறும் - என்
கடந்த கால கறைகளைக் கழுவுகிறது.

அடுத்தடுத்து நீ செய்கிற
கொடுமைகள் 
என் அயோக்கியத்தனங்களை
படிப்படியாய் மறைக்கின்றன.

அடுத்தடுத்த ஆண்டுகளில்
நீ செய்கின்ற அட்டூழியங்கள்  
என்னை
புனிதனாகவே மாற்றிவிடுகின்றன.

இப்படித்தான்
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை
நீ என்னையும்
நான் உன்னையும்
மாற்றி மாற்றி புனிதப்படுத்திக் கொள்கிறோம்


- சுமன் கவி

7 comments:

  1. திருவாளர் ராமன்,
    பார்த்து எழுதுப் போதாவது தப்பில்லாமல் பார்த்து எழுதக் கூடாதா?

    :((

    ReplyDelete
  2. கவிதைக்கு பொய்யழகு....... அப்படி பார்த்தா இந்த கவிதையில் அழகு மிஸ் ஆகிவிட்டது!!

    ReplyDelete
  3. அர்த்தமுள்ள வரிகள்

    ReplyDelete
  4. அய்யா மரியாதைக்குரிய அனாமதேயம்,
    பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
    ஆனால் உமது வாக்கியத்திலும்
    பிழை உள்ளதே?

    அடுத்தவர் குறையை சுட்டிக்காட்டும்
    தைரியம் உள்ள நீ, ஏன் உன்
    நிஜப் பெயரில் வர பயப்படுகிறாய்?

    ஓ அவனா நீ?

    ReplyDelete
  5. அந்த கவிஞருக்கும், அதை இங்கே பதிவிட்ட உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    -சிவேஷ்

    ReplyDelete
  6. அந்த கவிஞருக்கும், அந்த கவிதையை இங்கே பதிவிட்ட உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    -சிவேஷ்

    ReplyDelete
  7. இது யார் வந்தாலும் இப்படி தான் இருக்குமோ ? என்ன செய்வது தமிழனுக்கு அடி வாங்கி பழகி விட்டது.

    ReplyDelete