Wednesday, December 5, 2012

எப்படி மனம் வருகிறதோ? எப்படித்தான் கட்டுப்படியாகிறதோ? இரு முரண்பாடுகள்




நேற்று ஹோட்டல் சரவண பவனில் மினி டிபன் சாப்பிட்டேன்.

ஐந்து குட்டி இட்லி,
நான்கு அங்குல மசால் தோசை,
இரண்டு ஸ்பூன் கிச்சடி,
ஒரு ஸ்பூன் கேசரி


இதற்கு விலை ரூபாய் 88.00

இவ்வளவு குறைவான அளவிற்கு மிக அதிகமான விலை வைக்க எப்படித்தான் மனது வருகிறதோ? ஆனாலும் திட்டிக் கொண்டாவது அங்கேதான் போகிறோம் என்பது வேறு விஷயம்.

அதே நேரம் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்.

மதுரையில் உள்ள மீனாட்சிபவன் ஹோட்டலில் சில தினங்கள் முன்பு மதிய உணவு சாப்பிட்டேன். ஏ.சி அறையில் ஸ்பெஷல் மீல்ஸ்.

ஒரு சூப்,
விஜிடபிள் பிரியாணி – ஒரு கிண்ணம்,
ஒரு சப்பாத்தி
இரண்டு பொறியல்,
இரண்டு கூட்டு,
கட்லெட் போன்ற ஒரு வஸ்து,
காலிஃபளவர் சில்லி,
உருளை வறுவல்,
துகையல்,
அப்பளம்,
பாயஸம்,
ஸ்வீட்,
சாம்பார், காரக்குழம்பு, ரசம், தயிர், மோர்
ஐஸ்க்ரீம், வாழைப்பழம், பீடா
இத்துடன் அளவில்லாத சாதம்

இது எவ்வளவு ரூபாய் தெரியுமா?

வெறும் நூறே ரூபாய்தான்.

சுவையும் நன்றாகவே இருந்தது.

இங்கே சாப்பிட்டு முடிந்ததும்

எப்படித்தான் கட்டுப்படியாகிறதோ என்ற கேள்வி வந்தது.

சரவணபவன் அண்ணாச்சி,  மீனாட்சிபவன் போய் விட்டு வந்தால்
நன்றாக இருக்கும்.

அவர்களை கெடுக்காமல் இருந்தால் சரி

2 comments:

  1. இதே விலைதான் அடையார் ஆனந்த பவனிலும்..
    சென்னை காசு விளையாடும் இடம்.....அதனால் கூடுதல் விலை...

    ReplyDelete
  2. பேரு வாங்கியாச்ச, கொள்ளையடிக்கலாம்.

    தோகாவுல இருக்குற ச்ரவணபவனுக்கு அவ்வள்வு கூட்டம் வரும், ஆனா இதைவிட நல்ல உணவு தருகிற ஹோட்டல் இருக்குது. ஒருநாள் மதியம் ல்ஞ்ச் க்கு போயிருந்தேன், டிபன் ஆர்டர் பண்ணுனா 15 நிமிடம் வேணும் சூடான தோசை போடுறதுக்கு, ஆனா செஞ்சு வைச்ச சோறு கொண்டாறதுக்கு 15 நிமிடம் ஏன்? காக்க வைத்தால் மதிப்பு அதிகம் போல?

    ReplyDelete