Saturday, December 15, 2012

தா.பா, இதெல்லாம் ரொம்ப ரொம்ப தப்பு

குமுதம் ரிப்போர்ட்டர் படிச்சீங்களா என்று சில
தோழர்கள் கேட்டதும் வாங்கிப் படித்தால் மிகவும்
அதிர்ச்சியாக இருந்தது.

சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனத்தை
அனுமதிப்பதற்கு ஆதரவாக மத்தியரசு வெளியிட்ட
பிரசுரத்தை  சி.பி.ஐ கட்சிக்கு சொந்தமான 
பாவை அச்சகம் வெளியிட்டுள்ளது.

மத்தியரசின் பேனலில் உள்ளதால் வேறு 
வழியில்லை என்பது போல ஒரு
விளக்கம் தரப்பட்டுள்ளது.

கொள்கைக்கு எதிரான ஒன்றை  அது
அரசு ஒப்பந்தம் என்றாலும் அச்சடிப்பது
எவ்வளவு மோசமான சமரசம்?

முதலில் மத்தியரசின் பேனலில் இருப்பதே
தவறான ஒன்று. அந்த தவறு இப்படிப்பட்ட
நிலைக்குத்தான் இட்டுச்செல்லும்...

வர்த்தகத்திற்கான அச்சகம் என்றாலும்
அதற்கு ஒரு நெறிமுறை வேண்டாமா?

எங்கள் சங்கத்திலும் மாநாடுகளின் போது
மலர் வெளியிடுவோம். விளம்பரங்கள்
சேகரிப்போம்.

பார் அட்டாச்ட் ஹோட்டல் என்றாலே அந்த
விளம்பரத்தை வாங்க மாட்டோம்.எல்.ஐ.சி
முகவர்கள் சில பேர் தனியார் பொது இன்சூரன்ஸ்
கம்பெனியின் ஏஜென்டாகவும் இருப்பார்.
அப்படிப்பட்டவரின் விளம்பரங்களை
பெற மாட்டோம்.

சிறிய அளவிலான ஒரு தொழிற்சங்கமே
இப்படி சுய கட்டுப்பாடுகள் வைத்துள்ள போது
ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தடுமாறுவது
மோசமான ஒன்று.

இவர்களின் செய்கை கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களுக்கு
அல்வா சாப்பிடுவது போல அமைந்து விடுகிறது.

எ.எல்.ஏ க்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டு 
தொடங்கி இந்தப் பிரச்சினை வரை 
எல்லோரும் பொதுவாக கம்யூனிஸ்டுகள்,
காம்ரேடுகள் என்றுதான் எழுதுகிறார்கள்.

இவர்கள் செய்யும் தவறுக்காக மார்க்சிஸ்ட் கட்சி
தேவையின்றி சிலுவை சுமக்க வேண்டியுள்ளது.

தா.பா, உங்கள் பாதை தவறு.
மாற்றிக் கொள்ளுங்கள்,
முடியவில்லை என்றால் நான் கம்யூனிஸ்ட் அல்ல
என்றாவது சொல்லி விடுங்கள்
 

2 comments:

  1. PANAMUM VENUM, PATHAVIYUM VENUM, KOLGAIYUM VENUM ......ITHELLAM, ORE TIMELA KIDAIKKAATHUNNU SOLLUNGA THOZHAR!

    ReplyDelete
  2. who said Pondiyan is a communist?

    ReplyDelete