Thursday, December 6, 2012

ஆளும் கட்சி என்றால் ஆட்சியருக்கு கண்கள் தெரியாதா?





வேலூர் மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவு போட்டுள்ளார். அதன்படி ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு பின் வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

வைக்கப் போகும் பேனரின் டிசைனோடு எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ, அந்த இடத்தின் வரைபடத்தோடு  சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திடம் முதலில் அனுமதி வாங்க வேண்டும்.

அதன் பின்பு அந்த அனுமதியை நெடுஞ்சாலைத் துறைக்கு அளித்து அவர்கள் அனுமதியை பெற வேண்டும்.

பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனுமதியைப் பெற வேண்டும்..

அந்த அனுமதிக் கடிதத்தை மாநகராட்சி அலுவலகத்தில் அளித்து பணம் கட்ட வேண்டும்.

ஆட்சித்தலைவர் அனுமதிக் கடித எண், மாநகராட்சி அலுவக ரசீது இரண்டையும் பேனரிலேயே ஒரு மூலையில் அச்சிட்டு அதன் பிறகே பேனரை கட்ட முடியும்.

எவ்வளவு நாள் என்ற விதிமுறையும் உண்டு.

இந்த விதிமுறைகள் மீறப்பட்டால் அந்த பேனர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

ஆகஸ்ட் மாதம் எங்கள் கோட்ட மாநாடு நடந்த போது ஐந்தே ஐந்து பேனர்கள் வைக்க பதினைந்து நாட்கள் அலைய வேண்டியிருந்தது. அலைச்சலைக் குறைக்க ஒரே காவல் நிலைய எல்லைக்குள்ளே எல்லா பேனர்களையும் வைத்தோம்.

விளம்பரம் சரியாக இல்லை என்று விமர்சனம் வந்து அதற்கு விளக்கம் வேறு அளிக்க வேண்டியிருந்தது.

ஆனால் இன்று அதிமுகவின் வேலூர் நாடாளுமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம். அதற்காக அமைச்சர் பெருமக்கள் வந்துள்ளனர். அதற்காக வேலூர் மாநகரம் முழுதும் முதல்வரின் படம் தாங்கிய பிரம்மாண்ட பேனர்கள் அடிக்கொன்றாக நூற்றுக் கணக்கில் உள்ளது.

இதைத்தவிர சின்னஞ்சிறிய பேனர்களுக்கு அளவேயில்லை. எந்த ஒரு பேனரிலும் எந்த அனுமதிக் கடித எண்ணும் இல்லை, ரசீது எண்ணும் இல்லை.

ஆளும் கட்சி கண்டிப்பாக எந்த ஒரு அனுமதியும் ஒரு பேனருக்குக் கூட பெற்றிருக்காது என்பது சிறு குழந்தைக்குக் கூட தெரியும்.

மாவட்ட ஆட்சியருக்கு மட்டும் தெரியாது போலும். ஆளும் கட்சி என்பதால் கண்களை மூடிக் கொண்டுதான் காரில் போகிறாரோ என்னமோ......

பறிமுதல் செய்ய வேண்டிய காவலர்கள் பாதுகாப்பிற்காக நிற்பது இன்னும் ஒரு கொடுமை. 

கூட்டம் நடந்த மண்டபம் இருந்த இடத்தில் குழல் விளக்குகளும்
வண்ண விளக்குகளும் ஒளி வெள்ளத்தை பாய்ச்சிக் கொண்டிருக்க
சாலையின் மறு புறம் மின் வெட்டால் இருண்டு கிடந்தது
வேறு ஒரு கொடுமை

1 comment: