Thursday, February 14, 2013

தூக்கு மேடைக்கு அனுப்புவதுதான் ஜனாதிபதியின் வேலை போலும்!




வரிசையாக கருணை மனுக்களை எல்லாம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துக் கொண்டே இருக்கிறார். நாட்டில் உள்ளவர்களை எல்லாம் தூக்கில் ஏற்றிவிட்டுத்தான் ஓய்வார் போல. பிரதீபா படீல் போல வெளிநாட்டுப் பயணம் எங்கும் செல்லாமல் இந்த ஒரு பணிதான் செய்கிறார் போலும்.  வேறு வேலை எதுவும் இல்லையா பிரணாப்ஜீ?  நிஜமாகவே படித்து பார்த்து விட்டுத்தான் கையெழுத்து போடுகிறீர்களா? இல்லை உங்கள் கையெழுத்தை ரப்பர் ஸ்டாம்ப் செய்து வைத்து வேறு யாராவது போட்டு விடுகிறார்களா?

8 comments:

  1. ஏலே பக்கி என்ன எழுதுதே எதாவது தெரிஞ்சு தான் எழுதுதியா இல்லை கம்ப்யூட்டர் கிடைச்சிருச்சேன்னு என்னத்தாயாவது எழுதிக்கிடுறியா.... ஆக்கங் கெட்ட கூவ.... கொலைகார்ப்பயலுவல கொலுவலய வைப்பாக.... அவனுகளை வேற என்னல பன்னச் சொல்லுத......

    ReplyDelete
  2. ஏதேனும் குற்றம் நடந்தால் குற்றவாளிகளைக் கண்டுபிடியுங்கள் தண்டனை கொடுங்கள் என்று சொல்லுகிறீர்கள். நீதி மன்ற விசாரணை நடந்து தண்டனை கொடுத்தால் தப்பு என்கிறீர்கள். நீங்கள் நீதிமன்றம் விசாரணை தேவையில்லை, கட்ட பஞ்சாயத்தே சரி என்று சொல்கிறீர்களா?

    ReplyDelete
  3. திரு இள்ங்கோ, தூக்கு தண்டனை என்பது அரசு நிகழ்த்தும் கொலை. இது தீர்வல்ல, விரிவான பதிவு பிறகு எழுதுகிறேன்.

    ReplyDelete
  4. ஏய் அனானி, நெல்லை பாஷை பேசினா, நீ யாருனு தெரியாதா? தைரியம் இருந்தா உன் சொந்த பெயர்ல வா, இப்படி கோழையா அனானியா, இல்லை தலைவர் யர் பெயரிலயாவது வராத, என் பொறுமைய சோதிக்காதே, ஓடிப் போயிடு, எல்லாம் உருப்படும்

    ReplyDelete
  5. எந்த உயிரையும் எடுக்க யாருக்கும் உரிமை கிடையாது அது அரசாங்கமே இருந்தாலும் சரி. ஒரு கொலைக்கு மற்றொரு கொலை தீர்வாகாது. தங்கள் கருத்து சரியே.

    ReplyDelete
  6. அனானி தெரியாம்ம சொல்லிட்டாரு. மன்னிச்சிடுங்க.இந்திய அரசுக்கு ஒரு அறிவும் இல்லங்க. நம்ம சீனாக்காரன் செய்யற மாதிரி சத்தமில்லாம்ம முடிச்சிட்டு போக வேண்டாமா கொலைக்கார பயல்களை. அப்படி தான் உய்க்குர் மாகாணத்தில் செய்றானுங்கோ. நான் சொல்றது சரி தானெ. கம்யூனிஸ்ட்காரன்கிட்ட நாம தெரிஞ்சுக்க வேண்டியது ரெம்ப இருக்கு. என்ன தோழரே.

    ReplyDelete
  7. வாய்யா அனானி, நீ மறுபடியும் வேற வேஷத்தில வருவேனு தெரியும். வெட்கம், மானம்,சூடு, சொரணை எதுவுமே கிடையாதா உனக்கு, உன்னை மாதிரி கீழ்த்தரமான ஜன்மங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

    ReplyDelete
  8. அனாமதேயத்திற்கு ஒரு எச்சரிக்கை,

    உன்னைப் போன்ற தரங்கெட்ட, கீழ்த்தரமான
    செய்கை கொண்டவர்களின் பின்னூட்டங்களை
    வெளியிட்டு என் வலைப்பக்கத்தை நான்
    கறைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
    உனக்கு ஏதேனும் எழுத வேண்டுமென்றால்
    அதை உன் பக்கத்திலேயே எழுது.

    நீ யார், உன் யோக்கியதை இதையெல்லாம்
    உலகம் புரிந்து கொள்ளும் நாள்
    வெகு தூரத்தில் இல்லை

    ReplyDelete