Sunday, February 3, 2013

கண்துடைப்பிற்காக ஒரு நாடகம்




ன்மோகன் அரசு திடீர் அவசரச்சட்டம்

நீதிபதி வர்மா குழு பரிந்துரைகளை புறந்தள்ள முயற்சி : சிபிஎம் கண்டனம்

 
புதுதில்லி, பிப். 2-பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து நீதி பதி ஜே.எஸ்.வர்மா குழு அளித்த பரிந்துரைகளை நிரா கரிக்கும் விதமாக, வேறு பல அம்சங்களுடன் மத்திய அரசு திடீரென அவசரச்சட்டம் கொண்டுவந்துள்ளது. இதை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. நீதிபதி ஜே.எஸ். வர்மா குழுவின் அறிக்கையை அம லாக்க வேண்டு மென்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பெண்கள் அமைப்புகள் வலியுறுத்திய நிலையில், இந்த அறிக்கையை பரிசீலிக்க மத் திய அமைச்சரவையின் சிறப் புக்கூட்டம் தில்லியில் வெள் ளியன்று மாலை நடந்தது. பிரதமர் மன்மோகன்சிங் தலை மையில் நடைபெற்ற இக்கூட் டத்தில், பெண்கள் மீதான வன் முறையில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க அவச ரச்சட்டம் கொண்டுவருவது என முடிவு செய்யப்பட்டது. 

பாலியல் வன்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு குறைந்த பட் சம் 20 ஆண்டு சிறைத்தண் டனை, கும்பலாக இக்குற்றத் தில் ஈடுபட்டு அப்பெண் ணுக்கு கடும் காயம் ஏற்படுத் துவோருக்கு ஆயுள் தண்ட னை விதிக்க அவசரச்சட்டம் வழி செய்கிறது. ஆயுள் தண் டனை பெறுவோர் சாகும் வரை சிறையிலேயே இருக்க வேண் டும். அதேபோல ஆசிட் வீசுப வருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை; அதிபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப் படும் என்பது உள்ளிட்ட விப ரங்கள் இடம்பெற்றுள்ளன. நாடாளுமன்றம் எதிர்வரும் 21ம் தேதி கூடவுள்ள நிலை யில், திடீரென அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-பெண்கள் மீதான பாலியல் வன்முறை கள் தொடர்பான விஷயத்தில், குற்றங்களின் தன்மை குறித்தும் தண்டனை நடைமுறை குறித்தும் மத்திய அரசு திடீ ரென அவசரச்சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஏற்றுக்கொள் ளவில்லை. இன்னும் மூன்று வார காலத்தில் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், இப்படி அவசரச்சட்டம் பிறப்பிப்பது ஜனநாயக விதிகளுக்கு எதி ரானது. 

இந்த அவசரச்சட்டமா னது, வர்மா குழுவின் பரிந் துரைகளை நிராகரிக்கிறது. குறிப்பாக, பாலியல் வன் புணர்ச்சி என்பதை சட்டத் தில் பாலின ரீதியான குற்ற மாக குறிப்பிடவேண்டும்; இது போன்ற குற்ற வழக்குகளில் தங்களது கடமையைச் செய் யத் தவறிய அரசு அதிகாரிக ளுக்கு தண்டனை அதிகரிக் கப்பட வேண்டும்; ஆசிட் வீச் சுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக் கப்பட்ட பெண்களுக்கு நிவார ணம் அளிப்பது உத்தரவாதப் படுத்த வேண்டும்; இதுதொடர் பான குற்றங்களுக்கு தண்ட னை அதிகரிக்கப்பட வேண் டும் போன்றவை வர்மா குழு அறிக்கையில் இடம்பெற் றுள்ள இதர பரிந்துரைகளைப் போலவே மிகுந்த முக்கியத் துவம் வாய்ந்தவை.

 எனவே, இதை மறுதலித்த தன் மூலம் வர்மா குழு அறிக் கைக்கு இந்த அவசரச் சட்ட மானது அநீதியை இழைத்துள் ளது; அதுமட்டுமல்ல, சட்டத் தில் திருத்தம் கொண்டு வந்து, பாதுகாப்புப் படையினரையும் இந்தக்குறிப்பிட்ட குற்றவியல் சட் டத்தின் வரையறைக்குள் கொண்டுவருவது உள்பட, அரசின் பொறுப்பு குறித்து எழுப்பப்பட்டுள்ள மிக முக்கிய மான அம்சங்களை திசை திருப்பும் விதமாகவும் அமைந் துள்ளது.அதேபோல, மரணதண் டனை விதிப்பதை பொறுத்த வரை, அரிதிலும் அரிதான வழக்கு என்ற புரிதல் ஏற்கெ னவே சட்ட வரையறையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது; அதனடிப்படையில் பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கொலை வழக்குகளை அதில் இணைத்துக்கொள்ள வேண் டும் என்று நீதிபதி வர்மா குழு வினால் வலியுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தீக்கதிர் நாளிதழ்

 

2 comments:

  1. வலைச்சர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
    அனைத்தும் ஒரே இணையத்தில்....
    www.tamilkadal.com

    ReplyDelete