Friday, March 1, 2013

முரண்பாடாய் ஒரு துறவறம்





இன்று வேலூரில் ஒரு ஜைன மதப் பெண் துறவறத்தில் இணைகிறார். அதற்கான சடங்குகள் நடந்தன. திருமண ஊர்வலம் போல பிரம்மாணட, ஆடம்பர ஊர்வலம், அதற்காக நடைபெற்றது.

துறவறம் என்பது ஆசைகள் அத்தனையையும் துறந்து வாழ்வது. எளிமை என்பது மிகவும் அடிப்படையானது. அதிலும் பொதுவாக ஜைன மதத் துறவிகள் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள்.

அப்படிப் பட்ட துறவறத்தை ஏற்கும் நிகழ்ச்சி மிகுந்த ஆடம்பரத்தோடு நடைபெற்றது மிகுந்த முரண்பாடாய் தோன்றியது. அந்த மதத்தை சேர்ந்த ஒரு நண்பரிடம் கேட்ட போது பெண்ணின் திருமணத்தை கொண்டாடும் வாய்ப்பில்லாத பெற்றோர்கள், இந்த நிகழ்வையே விழாவாக கொண்டாடுகின்றார்கள் என்றார்.

மதிய உணவு நேரத்தில் இதுவே இன்று விவாதப் பொருளான போது, இவ்வளவு ஆடம்பரமான வாழ்வைத் துறந்து அவர் சன்னியாசினியாகப் போகிறார் என்று காண்பிப்பதற்குத்தான் இந்த ஏற்பாடுகள் என சிலர் விளக்கமளித்தனர்.

எனக்கு இன்னும் நெருடலாகவே உள்ளது.


1 comment:

  1. ராமன் அவர்களே! சமணர்கள் தர்க்க வியலிலும்,அறிவியல்நோக்கிலும் மிகச்சிறந்தவர்கள்! இந்த உலகம் "ஸ்கந்தங்களால் " (molecule) களால் ஆனது என்றவர்கள் அவர்கள்! ஸ்கந்தத்தைப்பிரித்தால் அணுக்களாகும் என்றார்கள் ! அணுவை பிரிக்காமல்விட்டுவிட்டார்கள் ! அவர்களையே சாமியாக்கி விட்டான் மனிதன்! உங்களூரின் அருகிலிருக்கும்"வள்ளி மலை" சமணர் கோவில்! வாரியர் அதனை வள்ளிமலையாக்கிவிட்டர்! மலையில் இன்றும் ஒரு சமணத்துறவி குகையில்வாழ்கிறார்! சந்தர்ப்பம்கிடைத்தால் போய் பாருங்கள் ! ---காஸ்யபன்.


    ReplyDelete