Sunday, March 24, 2013

ஃபேன்ஸி ஸ்டோரான இண்டிகோ விமானம்







சமீபத்தில் டெல்லி சென்று வந்தேன். எல்.டி.சி ப்ளாக் (விடுமுறை பயணச் சலுகை) ஒன்று காலாவதியாகும் நிலையில் இருந்ததால் விமானத்தில் சென்று வந்தேன். விமானங்களில் உணவு, காபி கொடுப்பதையெல்லாம் நிறுத்தி எத்தனையோ காலம் ஆகி விட்டது. ஐந்து நட்சத்திர ஹோட்டல் சாப்பாடு என்று சொன்னாலும் எந்த சாப்பாடும் சகிக்காது என்பது வேறு விஷயம். முன்பு ஒரு அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் கொடுப்பார்கள். இப்போது அதுவும் இல்லை. பத்து பைசா மிட்டாய் கூட கிடையாது.

உணவோ, காபி, டீயோ எது வேண்டுமானாலும் யானை விலை, குதிரை விலை கொடுத்து வாங்கிட வேண்டும். தண்ணீர் கேட்டால் மட்டும் போனால் போகிறது என்று நாக்கை நனைக்க அரை கப் தருகிறார்கள். அது தொண்டை வரை கூட செல்வதில்லை.

இதுவெல்லாம் பரவாயில்லை என்றாகி விட்டது இப்போதைய அனுபவம்.

இண்டிகோ ஏர்லைன்ஸில்தான் டெல்லி சென்று திரும்பி வந்தேன்.

முதலிலேயே ஒரு அறிவிப்பு கொடுத்து விட்டார்கள். உங்கள் சீட்டிற்கு முன்பாக ஒரு புத்தகம் உள்ளது. அதைப் படித்து உங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். பிறகு எங்கள் ஊழியர்கள் வருவார்கள் என்று.

புத்தகத்தை புரட்டினால் ஏராளமான பொருட்கள்

தொப்பிகள்,
ஸ்கூல் பைகள்,
கேஷ் பேகுகள்,
செல்போன், லாப்டாப் பவுச்சுகள்,
கவரிங் நகைகள்,
செண்ட் பாட்டில்கள்,
நெயில் பாலிஷ் பாட்டில்கள்,
பேனாக்கள்

இத்யாதி, இத்யாதி வகையறாக்கள்.

விலை கொஞ்சம் குறைவுதான்.
ஆமாம்
விமானத்தின் விலையை விட கொஞ்சம் குறைவுதான்.

பெல்ட் மாட்டுவது, கடலில் விழுந்தால் எப்படி தப்பிப்பது போன்ற சம்பிரதாயங்கள் முடிந்த பின் ட்ராலியைத் தள்ளிக்கொண்டு இது வேண்டுமா, அது வேண்டுமா என ஏர் ஹோஸ்டஸ்கள் விற்பனைப் பிரதிநிதிகளாக மாறி விட்டனர்.

விமானத்தில் இருப்பதற்கு பதிலாக ஏதோ ஒரு ஃபேன்ஸி ஸ்டோரில் இருப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது.

அதிகமான விலையாக இருந்தாலும் அவற்றையும் வாங்கும் பணக்காரர்களும் அங்கே இருந்தார்கள் என்பதுதான் யதார்த்தம்.

விமானக் கட்டணத்திற்கு மட்டும்தான் எல்.டி.சி யில் பணம் கிடைக்கும். விமானத்தில் விற்கும் பொருட்களுக்குக் கிடையாதே! எனவே வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும்...

4 comments:

  1. இண்டிகோ ஏர்லைன்ஸ்-எவ்வளவு சிக்கனம்...!

    ReplyDelete
  2. Comrade,
    How can you go by private airline and neglecting Indian airlines or air india a govt PSU

    ReplyDelete
  3. நீங்கள் கூறியுள்ளது நியாயமான விமர்சனம். அதை நான் ஏற்கிறேன். விமான நேரத்தை ஒதுக்குவதில் மத்திய விமானத்துறை அமைச்சகத்தின் சதியும் இதில்
    அடங்கியுள்ளது. வசதியான நேரம் என்பது பெரும்பாலும் அரசு விமானங்களில் இல்லை. இருந்த ஒன்றிரண்டு விமானங்களில் முன்பதிவும் கிடைக்கவில்லை. தனியார் விமானங்களை நாடும் நிர்ப்பந்ததை அரசே உருவாக்குகிறது.

    ReplyDelete
  4. Your reply is not convincing

    ReplyDelete