Monday, May 13, 2013

சித்தராமைய்யா உஷாரய்யா உஷார்

 

வாழ்த்துக்கள் சித்தராமய்யா,
பழம்பெருச்சாளிகள் ஏராளமான ஆட்கள்
இருந்தாலும் பல்டி அடித்த ஐந்தாவது
ஆண்டிலேயே முதலமைச்சர் ஆகி விட்டீர்கள்.
உங்களைச் சொல்லியும் தவறில்லை,
முதல்வராவது வாய்ப்பே இல்லாத கட்சியில்
இருப்பதை விட காங்கிரசிற்கு தாவுவது மேல்
என்று முடிவெடுத்து விட்டீர்கள்,
முதல்வராகி விட்டீர்கள்.

இனிமேல்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
முன்பு இருந்த கட்சியில் முதல்வராக வாய்ப்பு கிடையாது.

இப்போது உள்ள கட்சியோ முதல்வர்களை மாற்றிக்
கொண்டே இருக்கும் கட்சி. கர்னாடகத்திலேயே
பார்த்த அனுபவம் உங்களுக்கு இருக்கும்.

உங்கள் காலை எப்படி வாருவது,
உங்கள் நாற்காலியை எப்போது கவிழ்ப்பது
என்ற உள்ளடி திட்டமிடல்கள் தொடங்கியிருக்கலாம்.
இதிலே மாநிலத் தலைவரை உங்களது உள்குத்து
வேலைகள்தான் தோற்கடித்தது என்ற செய்திகள்
வேறு உலா வருகிறது.

இப்போதைக்கு உங்களுக்கு மேலிடத்திலிருந்து 
பிரச்சினை வர வாய்ப்பில்லை.

சொந்த செல்வாக்கு வளராதவரை,
பொம்மையாய் தலையாட்டும்வரை
பிரச்சினை வரவில்லை.

எனவே நாற்காலியை பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள்.
மக்களுக்கு நல்லது செய்ததாய் உங்கள் கட்சிக்கே
பாரம்பரியம் கிடையாது. ஆகவே உங்களுக்காவது ஏதாவது
நல்லது செய்து கொள்ள பதவியை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
 
 
 

No comments:

Post a Comment