Sunday, May 26, 2013

டப்பிங் போலவே எடுக்கப்படும் தமிழ் மகாபாரதம்




http://vijaytamil.org/wp-content/uploads/MahabharathamSun-Tv-Serial-MahabharathamMahabharatham-Serial.jpg


 http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/abirami/uploads/Kollywood/2013/Feb/15/Mahabharatham_Tv_Serial_Working_Stills/Mahabharatham_Tv_Serial_Working_Stillsc2cda82c5ea1ad19f98ff7d71de1ef63.jpg



சுரேஷ் கிருஷ்ணா - மகாபாரதத்தை தமிழில் எடுங்களேன்

சன் டிவி யில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒளிபரப்பாகும்
மகாபாரதம் தொடரை முன்பு இரண்டு வாரங்கள் பார்க்க
நேரிட்டது. இன்றும் பார்க்க நேர்ந்தது. 

தமிழில் எடுக்கப்பட்ட தொடர் என்ற உணர்வே கொஞ்சம் கூட
வரவில்லை. ஹிந்தியில் எடுக்கப்பட்டு டப்பிங் செய்த தொடர்
போலவே உள்ளது.

பி.ஆர்.சோப்ரா எடுத்த ஹிந்தி மகாபாரதத்தின் பாதிப்பிலிருந்து
சுரேஷ் கிருஷ்ணா வெளிவரவில்லை போலும். வசனங்கள் 
எல்லாம் மிகவும் செயற்கையாக ஒட்டவே ஒட்டவில்லை.

இதே மகாபாரதக் கதைதான் கர்ணன் திரைப்படமும். பல 
வருடங்கள் முன்பு வந்தது. தூய தமிழ் வசனங்கள்தான். ஆனால்
அது இயல்பாக இருந்தது போல பிரபஞ்சனின் வசனங்கள் இல்லை.

எங்கோ, ஏதோ உதைக்கிறது.
அது என்னவென்று கண்டுபிடித்து சரி செய்யுங்கள்,
இல்லையென்றால் அத்தனை பணமும் எள்தான்.

மகாபாரதத்தை விட அபத்தங்கள் அதிகமாக உள்ள
கதை ஏதாவது உண்டா?

இன்றைய தமிழ் சீரியல்களில்  காணும் ஒழுக்கக் கேடுகளுக்கு
துவக்கம் மகாபாரதமே -  விரைவில் எழுதுவேன்

 

7 comments:

  1. http://www.youtube.com/watch?v=vxFhVD3NKcY&feature=share இதில் வரும் வசனங்கள் தமிழில் வரவே இல்லையே ஐயா

    ReplyDelete
  2. http://www.youtube.com/watch?v=CsawuaJU1uM குருதட்சணை பற்றி முதல் பத்து நிமிடத்திற்குள்ளேயே ஆரம்பித்து விருகிறார். என் டி ஆர். ஏனோ தமிழ் படத்தில் இதெல்லாம் இல்லை.

    ReplyDelete
  3. பார்த்தேன்...செம அறுவை...அதுக்கு ஹிந்தி எவ்ளோ மேல்.

    ReplyDelete
  4. எங்க தெலுகு வாத்தியார் சொல்வார் - ராமாயணம் , மனிதன் எப்படி வாழனும்-ன்னு சொல்லும்; மஹா பாரதம், மனிதன் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது-ன்னு சொல்லும்.
    I think he is right.

    ReplyDelete
  5. Of course, I did not see the Chopra's Maha Bharat and will not watch the current one of Suresh Krishna.

    நமக்கு இருக்கிற கொஞ்சம் கொஞ்சம் அறிவையும் அழிச்சூடுவாங்க இந்த தொல்லைக்காட்சி காரங்க.

    ReplyDelete
  6. ஏங்க மகாபாரதத்தில் நடிக்க வேண்டிய மூஞ்சின்களா அதுங்க , கருமம் ... இப்படி இருந்த எப்படி தத்ருபமா இருக்கும் தரித்தரமா தான் இருக்கும் .. :)

    ReplyDelete
  7. ஏங்க மகாபாரதத்தில் நடிக்க வேண்டிய மூஞ்சின்களா அதுங்க , கருமம் ... இப்படி இருந்த எப்படி தத்ருபமா இருக்கும் தரித்தரமா தான் இருக்கும் .. :)

    ReplyDelete