Friday, July 19, 2013

தாய் கொண்டு வந்ததை

எத்தனை இழப்பைத்தான்
தாங்கும் இந்த தமிழகம்?

பாடலைப் பாடியவர்,
பாட்டுக்கு இசை கொடுத்தோர்
போன பாதையிலே 
பாடல்களின் தந்தையும்
சென்று விட்டால்
போனால் போகட்டும் போடா
என்றா பாடிட முடியும்?

தாடி தடுக்காத 
தமிழ் கொண்டு
திரையுலகில் நீ செய்தாய்
அருந்தொண்டு.

காதலைப் பாடினாய்,
கருணையைப் பாடினாய்,
தாய்மையைப் பாடினாய்,
தவிப்பைப் பாடினாய்,
பொதுவுடமை பாடினாய்,
பொல்லாத பாட்டுக்களும் கூட
பாடினாய்,

வயது ஆனாலும்
வாலிபனாகவே
உன் பாட்டுக்கள்
உன்னைச் சொன்னது.

ராமன் இவ்வளவு நல்லவனா
என்று வியக்க வைத்தது
அவதார புருஷன்.
கிருஷ்ணனிடம்
இத்தனை விஷமங்களா
என்று கேட்க வைத்தாய்
பாண்டவர் பூமியில்.

இதிகாச வாலி
எதிர் நிற்பவரின் சக்தியில்
பாதியைக் கவர்பவனாம்.
உன் சக்தியையும்
உற்சாகத்தையும்
அடுத்தவருக்கும் கொடுத்தாய்
உன் பாடல் வரிகளிலே.

தமிழ் உள்ளவரை
நீயும் நிலைத்திருப்பாய்
உன் பாடல்களும் 
நிலைத்திருக்கும்

" தாய் கொண்டு வந்ததை
தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு 
போகும் நேரமம்மா "

திரைக்காக நீ
எழுதிய பாடலை
உனக்கே பாடி
கண்ணீரில் 
செலுத்துகிறேன் 
எந்தன் அஞ்சலியை

4 comments:

  1. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...!
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!

    ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  2. உண்மைதான். மரிக்கும்வரையிலும் 'வாலி'பனாகவே சிந்தித்து துடிப்புமிக்க சிந்தனைகளையும், காதலையும், கடமைகளையும் கவிதை வரிகளாக சொன்னவர். வாழ்ந்தாலும் மரித்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்றவராயிற்றே. நிச்சயம் அவர் பெயர் திரை ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றிருக்கும். அவருடைய ஆன்ம சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  3. வாலியின் வரிகள் இன்னும் நினைவில்...

    ReplyDelete
  4. THE GREATEST LOSS TO TAMIL LITERATURE!

    ReplyDelete