Tuesday, September 24, 2013

கலைஞரைப் பாராட்டுங்கள், ஏன்? எதற்கு?









என்ன மேலே உள்ள புகைப்படங்களைப் பார்த்தீர்களா?

ஒரு கார்ப் பயணத்தின்  போது எடுக்கப்பட்டவை இவை. கண்ணாடியின் வழியே தெரிகின்ற மாலை வேளைச் சூரியனின் புகைப்படங்கள் அழகாக உள்ளதல்லவா?

இவ்வளவு கலை ரசனையோடு இந்த புகைப்படங்களை எடுத்த அந்த
புகைப்படங்களை எடுத்த அந்த புகைப்படக் கலைஞருக்கு உங்கள் பாராட்டுக்களை தெரிவியுங்களேன்.

பின் குறிப்பு : கலைஞர் கருணாநிதி பற்றிய பதிவு என்று எண்ணி இங்கே வந்து ஏமாந்திருந்தால் மன்னிக்கவும். தவறில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது. சரி வந்தது வந்தீர்கள். உங்களது திருப்திக்காக கலைஞரைச் சாடி செய்து கவியரசு கண்ணதாசன் எழுதிய கவிதையின் இணைப்புஇங்கே  உள்ளது. அதை படித்து திருப்தி அடையவும்.

பின் குறிப்பு 2 : அந்த புகைப்படக் கலைஞர் யாரென்று சொல்ல முடியாமல் தன்னடக்கம் தடுக்கிறது.  

11 comments:

  1. கிளம்பிட்டாங்கையா? கொஞ்சப் பேர் கிளம்பிட்டாங்க!

    ReplyDelete
  2. அய்யா, ஹிட்ஸ்க்காக உங்கள் தளத்துக்கு வருவோரை ஏமாற்றாதிங்க.இனியொரு முறை இப்படி ஒரு பதிவு வந்தால்,நான் உங்க தளத்துக்கே வர மாட்டேன். மன்னிக்கணும்.

    ReplyDelete
  3. அந்த நல்ல படங்களை எடுத்த புகைப்படக் கலைஞருக்கு பாராட்டுக்கள்.
    கலைஞரைப் பாராட்டுங்கள் ஏன்? எதற்கு? என்பதிற்கு பதிலா கலைஞரை பாராட்ட கூடாது என்று தலைப்பு வைத்தீங்களானா கலைஞர் கருணாநிதியை தாக்கி ஒரு பதிவு என்று நினைச்சு பிரபல பதிவர்கள் எல்லாம் வந்திருப்பாங்க.

    ReplyDelete
  4. சரியா சொன்னிங்க..அனானி, பிளாக் படிக்க வர்றவங்க எல்லாம் வேலை வெட்டி இலலாதவன்னு நினைச்சிட்டார் போல ராமன்.

    ReplyDelete
  5. ஆனாலும் உங்களுக்கு அநியாயத்துக்கு தன்னடக்கம் தோழரே. அது பூரணம் கிண்டுவதில் சரி புகைப்படம் கிளிக்குவதிலும் சரி.

    ReplyDelete
  6. அந்த நல்லபுகைப்படங்களை எடுத்த கலைஞர் நீங்கள் தானா? பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. கலைஞரை பாராட்டினாலும் கூட்டம் (ஹிட்) வரும் திட்டினாலும் கூட்டம் வரும். மொத்தத்தில் கலைஞர் என்ற பெயரை வைத்து தான் இங்கு அரசியலே நடைபெறுகிறது. கலைஞர் என்ற பெயர் தலைப்பில் இருந்ததாலேயே நானும் இங்கு வந்தேன். கலைஞர் அவர்களின் ஆளுமையை சரியாக புரிந்து கொண்டவர்களில் ஒருவராகவே நீங்களும் காட்சி அளிக்கிறீர்கள்

    ReplyDelete
  8. அனானி நம்பர் 1 " பதிவுலகத்தில் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிற ஒன்றை நான் முதல் முறையாக முயற்சி செய்தேன். இருந்தாலும் உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்.

    ReplyDelete
  9. அனானி நம்பர் 2 - நீ யாரோ எவரோ தெரியாது, என் பெயரைச் சொல்லி கமெண்ட் போட்டு விட்டு உன் பெயரை மறைத்து விட்டாயே! உன் வீரம் இவ்வளவுதானா?

    ReplyDelete
  10. உடன் பிறப்பே, கலைஞர் ஒரு ஆளுமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த ஆளுமை நத்தையாக குடும்பத்திற்குள் ஒடுங்கி விட்டதே!

    ReplyDelete
  11. வருகை தந்த யோகன், வேகநரி, சுரேஷ், கோபி அனைவருக்கும் நன்றி

    ReplyDelete