Thursday, October 10, 2013

பேரம் பேசும் வீரம்




நட்சத்திர ஹோட்டலில்
பச்சை நோட்டு
டிப்ஸ் வைத்து,

குளு குளு அங்காடியில்
பள பள தாளில்
அச்சிட்ட ரசீதிற்கு
கார்டு தேய்த்து
கையெழுத்து போட்டு,

இடைவேளை நேரத்தில்
நூறு ரூபாய் சோளப் பொறி
வாய் வலிக்க
கொறித்துக் கொண்டு,

இஞ்சின் ஓடிக்கொண்டிருக்க
பெட்ரோலை
விரயம் செய்து
வெட்கம் இல்லாமல்
கேட்போம் நாம்.

பிய்ந்த செருப்பைத்
தைக்க இருபது ரூபாயா?

சின்ன கீரைக் கட்டு
இது பத்து ரூபாயா?

எளியோரிடம்
மட்டுமே
நமக்கு வரும்
பேரம் பேசும் வீரம்

1 comment:

  1. குனிவோரை குட்டுவதே தமிழனின் பழக்கமாகிப் போனது. (தலைமுறைப் பழக்கமோ ?)

    ReplyDelete