Saturday, October 19, 2013

தமிழருவி மணியன் ஐயா, இப்போ என்ன சொல்றீங்க??????




ராமர் கோயிலை கட்டுவது என்ற பிரச்சினையை எழுப்ப மாட்டோம்,

பொது சிவில் சட்டத்தை வலியுறுத்த மாட்டோம்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 ஐ நீக்கச் சொல்லி வலியுறுத்த மாட்டோம்

என்று பாரதீய ஜனதா கட்சி வாக்குறுதி அளித்தால் நரேந்திர மோடி பிரதமராவதில் தவறு இல்லை என்பது தமிழருவி மணியன் ஐயா சொன்னது.

இதோ நேற்று பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழுவின் தலைவர், அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் பேராசிரியர் முரளி மனோகர் ஜோஷி மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் பொட்டில் அறைந்தது போலவும் சொல்லி விட்டார்.

ராமர் கோயில் கட்டுவதும் பொது சிவில் சட்டம் வேண்டும் என்பதும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவை நீக்குவதும் எங்கள் அடிப்படைக் கொள்கை. அதிலே சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி விட்டார்.

இப்போது என்ன சொல்லப் போகின்றீர்கள் திரு தமிழருவி மணியன் ஐயா அவர்களே? என்ன செய்யப் போகின்றீர்கள்? நரேந்திர மோடியை பிரதமராக்குவது என்ற உங்கள் லட்சியத்தினை மாற்றிக் கொள்ளப் போகின்றீர்களா? இல்லை கொள்கை உறுதியோடு உங்கள் கதர் துணியில் நெய்யப்பட்ட காவிக்கொடிப் பயணத்தை தொடரப் போகின்றீர்களா?

2 comments: