Sunday, November 24, 2013

சிதம்பரம் அண்ணாச்சி, உங்களுக்கு 68 வயசே ஆயிடுச்சே

இன்று ஒரு கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 
மத்தியக் குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான
தோழர் டி.கே.ரங்கராஜன் ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

ஊட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் 
தொழிற்சாலையை மறுசீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
என்று வலியுறுத்தி அவர் ப.சிதம்பரத்திடம் மனு அளித்த போது
சிதம்பரம் அண்ணாச்சி அக்கோரிக்கையை மறுத்துள்ளார்.

அங்கே உள்ள தொழிலாளர்களின் சராசரி வயது  50. அவர்களால்
அந்த நிறுவனத்தை தூக்கி நிறுத்த முடியாது என்பது போலவும்
சொல்லியிருக்கிறார்.

ப.சி அண்ணாச்சி அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி. 

சராசரி வயது 50 உள்ள தொழிலாளர்களால் நலிவுற்ற ஒரு
ஆலையை சீரமைக்க முடியாது என்றால் அதை விட
கூடுதல் சராசரி வயதுள்ள உங்கள் அமைச்சரவையால்
நலிவுற்றுள்ள நாட்டை எப்படி தூக்கி நிறுத்த முடியும்?

ஏனென்றால் உங்கள் வயது 68, பிரதமர்வயது 81
முக்கிய அமைச்சர்கள் சரத் பவார் 73, ஏ.கே.அந்தோணி 73
மல்லிகார்ஜுன் கார்கே 71, சுஷில் குமார் ஷிண்டே 72
சல்மான் குர்ஷித் 60.

பிரதமர், நிதி, உள்துறை, விவசாய, பாதுகாப்பு, வெளியுறவு,
ரயில்வே ஆகிய  முக்கியமான பொறுப்புக்களை
வகிக்கும் உங்களின்  சராசரி வயதே 71. 

அப்படி இருக்கையில் 50 வயது தொழிலாளர்களைப் பற்றி
அவநம்பிக்கையாக பேசலாமா சார்?

4 comments:

  1. சராசரி வயது 50 உள்ள தொழிலாளர்களால் நலிவுற்ற ஒரு
    ஆலையை சீரமைக்க முடியாது என்றால் அதை விட
    கூடுதல் சராசரி வயதுள்ள உங்கள் அமைச்சரவையால்
    நலிவுற்றுள்ள நாட்டை எப்படி தூக்கி நிறுத்த முடியும்?

    மிக நியாயமான கேள்வி.

    ReplyDelete
  2. ஆள்பவர்கள் 90 வயதிலும் ஆளலாமாம் ஆனால் 50 வயது தொழிலாளியால் நிறுவனத்தை தூக்கி நிறுத்த முடியாதா ? மிகச் சரியான கேள்வி தோழர் ! எத்தனை வயதானாலும் இவர்கள் கொள்ளை அடிப்பதை மட்டும் நிறுத்த போவதில்லை. அதுதான் நிதர்சனமும் கூட

    ReplyDelete
  3. தோழரே இந்த விஷயத்துல நான் உங்க கட்சி. ஆனா நான் உங்க பக்கத்துக்கு வந்து பல நாள் ஆச்சி,
    அனானியா வரவேண்டிய சூழ்நிலை இருந்தாலும்
    நான் விவரமா அன்பே சிவம்னு சொல்லி இருக்கேன் அதுக்காக வழியில பாக்குற எல்லாரையும் (அனானிங்களையும்)அன்பே சிவம்னு கூப்டுவீங்களா..,

    சிவனேன்னு சிவன் இருந்தாலும் புடிக்காதா? அட கடவுளே சாரி சாரி ராமா!

    ReplyDelete
  4. இந்த மனிதர் ஒரு பெரும் பணக்காரர். இவர் என்றுமே நாட்டில் உள்ள ஏழை, நடுத்தர மக்களுகாக எதுவும் செய்யமாட்டார். எதுவும் செய்வதுபோல திட்டம் இட்டாலும், பேசினாலும் அது ஒட்டு வங்கிக்காக தான் இருக்கும். கல்வி கடன் அதிகம் கொடுக்க சொல்வது, கல்லூரிகள் நன்கு வியாபாரம் செய்யவே. நமது நலனில் அக்கறை இருப்பின் கட்டணத்தை குறைக்க ஏற்பாடு செய்யலாம் அல்லது தரமான ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு செய்து நல்ல கல்வியுடன் உடனடி வேலை வாய்ப்புக்கு உதவலாம்.

    இவரை ஒரு தலைவராக மதிக்க வேண்டாம்.

    ReplyDelete