Friday, November 29, 2013

எம்.ஜி.ஆர் "பாரத ரத்னா" வை திருப்பி அனுப்பினாரா? சொர்க்கத்திலிருந்தா?

சச்சினுக்கு பாரத ரத்னா அவசியமில்லை என்று நான் எழுதியிருந்தது
கடந்த வெள்ளியன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்
பிரசுரமாகி இருந்தது. அக்கட்டுரைக்கான வாசகர் கடிதங்கள் இன்று
வெளியான குமுதம் இதழில் பிரசுரமாகியுள்ளது.

மொத்தம் ஏழு கடிதங்கள். அதிலே நான்கு கடிதங்கள் எனது கருத்திற்கு
ஆதரவாகவும் மூன்று கடிதங்கள் மாற்றுக் கருத்துக்களோடும் 
வெளியாகியுள்ளது. 

பொது வெளியில் எழுதும் போது விமர்சனங்கள் கண்டிப்பாக வரும்
என்ற புரிதலோடுதான் எழுதுகிறோம். அது வாசகர்களுக்கான 
கருத்துச் சுதந்திரம். இது வலைப்பக்கத்திற்கும் பொருந்தும். என்ன
வரும் பின்னூட்டங்கள் கொஞ்சம் வன்மத்தோடோ, வக்கிரத்தோடோ
இல்லை அபத்தமாகவோ, இல்லை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே
நோக்கத்தோடு இடப்பட்டால் கொஞ்சம் கடுமையாக எதிர் வினை
ஆற்ற வேண்டியுள்ளது.

சரி இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.

மாற்றுக் கருத்தோடு வந்த மூன்று கடிதங்களும் எம்.ஜி.ஆர் பற்றி
நான் எழுதியிருந்ததை சரியாக புரிந்து கொள்ளாமல் எழுதப்
பட்டவை. அதற்கும் விளக்கமளிக்க முடியும். ஆனாலும் நான்
எழுதப் போவதில்லை. மிகவும் போரடித்து விட்டது.

ஆனாலும் கூட

சிவகாசியைச் சேர்ந்த  ரெய்கி செ.வேதமூர்த்தி அவர்கள் எழுதிய
கடிதத்தை படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

இதோ அந்த கடிதம்.

"" பாரத ரத்னா விருது குறித்து எஸ்.ராமன் அநாவசியமாக 
எம்.ஜி.ஆரையும் அவரது தொண்டர்களையும் வம்புக்கு இழுக்கிறார். இதை அப்போதே கருணாநிதி செய்து எம்.ஜி.ஆர் திருப்பி அனுப்ப,
' இல்லை. உங்களுக்கு தகுதியின் அடிப்படையில்தான் 
தரப்பட்டதாக மத்திய அரசும் விளக்கமும் தந்தது""

நான் எனது கட்டுரையில் எம்.ஜி.ஆருக்கு அவர் இறந்ததற்குப் 
பின்பே பாரத ரத்னா அளிக்கப்பட்டது என்பதை மிகவும் தெளிவாக
எழுதியிருந்தேன். மரணத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட 
பாரத ரத்னா விருதை திருமதி ஜானகி ராமச்சந்திரன் பெற்றுக்
கொள்ள, அதை எம்.ஜி.ஆர் எப்படி திருப்பி அனுப்பினார்?
மத்திய அரசு எம்.ஜி.ஆருக்கு எப்படி விளக்கம் அளித்தது?
யார் எங்கே சென்று விளக்கம் அளித்தார்கள்? யார் எம்.ஜி.ஆருக்கு
விளக்கம் அளிக்க சொர்க்கம் சென்றார்கள்? 

இதற்குத்தான் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியில்
வடிவேலு மிகவும் தெளிவாக, ஆணித்தரமாக சொன்னார்.

" வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே"
 

 

3 comments:

  1. எப்படியாவது தன் தலைவனுக்கு நல்ல பேரை வாங்கி கொடுக்க பார்த்துள்ளார் அந்த வாசகர். இப்படிப்பட்ட ஆட்களால்தான் தலைவர்களுக்கும் கெட்டப் பேரு

    ReplyDelete
  2. சிவகாசியைச் சேர்ந்தவர் அங்கேயிருந்து ராக்கட் விட்டிருக்கார்:)
    எம்.ஜி.ஆர் எப்போதே இருந்தே இல்லையே, //பாரத ரத்னா விருது குறித்து எஸ்.ராமன் அநாவசியமாக எம்.ஜி.ஆரையும் அவரது தொண்டர்களையும் வம்புக்கு இழுக்கிறார்//எம்.ஜி.ஆர் தொண்டர்கள் இப்பவும் இருக்காங்களா!!!

    ReplyDelete
  3. இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!

    ReplyDelete