Friday, November 22, 2013

மோடியின் கைகள் மட்டுமென்ன சந்தனத்திலா தோய்க்கப்பட்டிருக்கிறது?

மோடி காங்கிரஸ் மீது வைக்கப்பட்ட விமர்சனம் குறித்து 
தேர்தல் ஆணையம் விசாரித்து அவருக்கு அறிவுரை
சொல்லியுள்ளது.

மோடி பயன்படுத்திய வார்த்தையான "கூனி பஞ்சா" என்ற
வார்த்தையைத் தான் ஹிந்து நாளிதழ் போட்டிருந்ததே
தவிர அதன் அர்த்தத்தை போடவில்லை.

இன்றுதான் ஹிந்தி தெரிந்த ஒரு தோழரிடம் அர்த்தம்
கேட்டேன்.

கூனி பஞ்சா என்றால் ரத்தம் தோய்ந்த கை என்று பொருளாம்.

காங்கிரசின் கை ரத்தம், ஊழல் எல்லாம் தோய்த்தெடுத்ததுதான்.

ஆனால் இவர் கை.

ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களின் ரத்தத்தில் 
தோய்த்தெடுக்கப்படாமல் சந்தனத்திலா மோடியின்
கை தோய்த்தெடுக்கப் பட்டுள்ளது?

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாத மனிதன் மோடி

4 comments:

  1. நாவடக்கமில்லாத அரசியல்வியாதிகள்

    ReplyDelete
  2. காங்கிரஸ் மற்றும் பிஜேபி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். ஆனால் இடதுசாரி கட்சிகள் காங்கிரஸின் கொலைகள், கொள்ளைகளை பிஜேபியின் குற்றங்களுக்கு கொடுக்கும் அழுத்தம் கொடுபதில்லை என்பதுதான் என்னுடைய வருத்தம்.1984 சீக்கியர் மீதுநடந்த வன்முறைபற்றி ஒரு விரிவான கட்டுரை வந்து இருக்கிறதா.

    ReplyDelete
  3. மோடியை பற்றி இனி எழுத போவதில்லை என்று சொல்லிவிட்டு மறுபடியும் மோடி புராணமா ? "விடாது கருப்பு ?"

    ReplyDelete