Sunday, January 26, 2014

தட்கால் – காத்திருப்போருக்கு இழைக்கப்படும் அநீதி



தனக்கு வந்தால் தெரியும் தலைவலி என்பது  மிகச் சரியாகி விட்டது. பொதுவாக திடீரென வரும் பயணங்களுக்கு மட்டுமே தட்காலில் சீட்டு வாங்கி பயணிப்பது பழக்கம்.

ஆனால் இந்த முறை கிடைத்ததோ மாறுபட்ட அனுபவம்.

அகில இந்திய மாநாட்டிற்கு நாக்பூர் செல்ல பயணச்சீட்டுக்கு முன்பதிவு செய்ய முடிந்தது. கன்பர்ம்ட் டிக்கெட்டே கிடைத்தது. ஆனால் அங்கிருந்து 24.01.2014 அன்று  திரும்பி வர ஸ்வர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்தால் காத்திருப்போர் பட்டியலில்தான் டிக்கெட் கிடைத்தது. இது முன்பதிவு தொடங்கிய முதல் நாளே உள்ள நிலை. காத்திருப்போர் பட்டியல் எண் 14 லில் தொடங்கியது. மொத்தம் ஒன்பது பயணிகள்.

இரண்டு மாதமாகியும் நிலைமையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. எப்போது பார்த்தாலும் அதே 14 என்ற நிலைமையை விட்டு பட்டியல் நகரவேவில்லை. ஆகவே 23 ம் தேதியன்று வேறு வழியில்லாமல் தட்காலில் பதிவு செய்தோம்.

தட்காலிலும் பயணச்சீட்டு கண்டிப்பாக கிடைக்கப் போவதில்லை, திண்டாடி தெருவில்தான் நிற்கப் போகிறோம் என்ற அச்ச உணர்வோடே பதிவு செய்தால் ஒன்பது பேருக்கும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுக்களே கிடைத்து விட்டது. அதிலும் ஐந்து லோயர் பெர்த், நான்கு மிடில் பெர்த்.

அதற்குப் பிறகும் ஏற்கனவே இருந்த காத்திருப்போர் பட்டியலின் நிலைமையைப் பார்த்தால் பழையபடி 14 என்றே பல்லிளித்தது. இரண்டு மாதங்களாக காத்திருப்பவர்களுக்கு உறுதி செய்யாமல் முதல் நாள் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை தருவது என்பது எவ்வளவு பெரிய அநீதி!. கூடுதல் பணம் கொடுத்தால் ஸ்பெஷல் தரிசனம், இல்லையென்றால் தர்ம தரிசனம் போன்ற வழிபாட்டு தளமா ரயில்வே துறை?

இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்தவர்களின் பணத்தை வைத்துக் கொண்டே, அதற்கான வட்டியையும் அனுபவித்துக் கொண்டே அவர்களுக்கு பயணத்தை வழங்காமல் தட்கால் என்ற பெயரில் கூடுதல் பணம் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த முறை மாற்றப்பட வேண்டும்.

காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு உறுதி செய்த பின்பே தட்கால் முன்பதிவையே தொடங்க வேண்டும். இதற்காக குரல் கொடுப்போமா?

8 comments:

  1. Don't worry thambudu .... Kamoinisitukalukku thani kudukka solren....

    ReplyDelete
  2. Muttaal Anna, Naan unnai mathiri aalukkum serthuthaan pesaren. when communists come to power, these anomaly will be removed

    ReplyDelete
  3. // when communists come to power, these anomaly will be removed//

    Appo.... This will not happen at all..... :-)

    ReplyDelete
  4. //Don't worry thambudu .... Kamoinisitukalukku thani kudukka solren....//

    intha vennai enna da enaku seat vaangi tharathu??

    ReplyDelete
  5. \\கூடுதல் பணம் கொடுத்தால் ஸ்பெஷல் தரிசனம், இல்லையென்றால் தர்ம தரிசனம் போன்ற வழிபாட்டு தளமா ரயில்வே துறை?\\

    இதற்க்கு உதாரணம் கொடுக்க உங்களுக்கு கோவில் கிடைத்ததா? கையூட்டு பெரும் அரசு ஊழியர் சொல்லலாமே? கோவில் செலவுகளுக்கு பணத்துக்கு போவது? பணக்காரனிடம் வாங்கினால் தானே மற்றவர்களுக்கு பிரசாதம்,குறைந்த விலையில் விடுதிகள் என சவுகரியங்களைச் செய்து தர முடியும்? பணம் இருந்தால் அதைக் கொடு, இல்லாவிட்டால் உன் நேரத்தைக் கொடு, இதிலென்ன தவறு?

    ReplyDelete
  6. இல்லை நண்பரே! தத்கால் என்பது திடீரென்று பயணம் மேற்கொள்ளுபவர்களில் சிலருக்காவது பயன்படட்டுமே என்று தான் அறிமுகப்படுத்தப்பட்டது. எல்லாருமே உங்களைப் போல் அறுபது நாள், தொண்ணூறு நாள் முன்பாகத் திட்டமிடமுடியாதே! திடீரென்று ஒரு சாவு வந்தால் பயனிக்கவேன்டாமா? எல்லா டிக்கட்டுகளையும் உங்களைப் போன்றவர்களுக்கே வழங்கிவிட்டால் அவர்கள் நிலை என்னாவது? எப்போதுமே சுயநல நோக்கில் சிந்திக்கவேண்டாம் நண்பரே!

    ReplyDelete
  7. Thanks to all friends who joined in the debate. Due to paucity of time and net problem, I could not reply. I presume My Concern for those who remain patiently in the waiting list is not understood.If the net becomes ok, I will elaborate my views tomorrow.

    ReplyDelete
  8. //இரண்டு மாதங்களாக காத்திருப்பவர்களுக்கு உறுதி செய்யாமல் முதல் நாள் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை தருவது என்பது எவ்வளவு பெரிய அநீதி!.//
    தோழர் சொல்வது நியாயமானதே. என்னாலும் ரயில்வே நிர்வாகத்தை புரிந்து கொள்ளவே முடியல்ல.நான் இந்தியா வருவதானா சில மதங்களுக்கு முன்பே திட்டமிட்டு பதிவு செய்தா நியாயமான விலையில் டிக்கட் பெறமுடியும். குறுகிய காலத்தில் பதிவு செய்தா அதிக பணம் கொடுக்க வேண்டும்.மிக குறுகிய காலத்தில் என்றா சிரமம்.அதிஷ்டவசமா கடைசி நாட்களில் ஒருவர் நோய்காரணமாகவோ வேறு காரணமாகவோ பயணிக்காத இருக்கை மலிவான விலையில் கிடைத்திருக்கிறது. இது மிக அருமையா தான் கிடைக்கும். ஆனா நம்ம ஊரிலே முதல் நாள் பதிவு செய்பவர்களுக்கு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்தவங்களைவிட முன்னுரிமை ரயில்வே நிர்வாகம் தருவது என்பது அநீதி.

    ReplyDelete