Saturday, February 22, 2014

ராஜீவ் கொலை நியாயமென்று சொன்ன சி.பி.ஐ இன்ஸ்பெக்டர்







 ஏற்கனவே நான் எழுதிய பதிவை மீண்டும் இங்கே பதிவு செய்துள்ளேன்.
ராஜீவ் காந்திக்கு நியாயம் என்ன என்று கேட்பவர்கள் அறிந்து
கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த மீள் பதிவு



 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoL_MIVb4WBrlC9CEj4FfqHmI47c3u-rzcTmBN-TIH3CQsFXk-5Go2lNmNP6XoHBzprDzmgK0Fb0vST46wwt9TYg1wpVTDhf7cOhxOyIJTUApKH_5uzG-FqL7x0NkXj4leN-zAAXeq_nWp/s1600/rajiv_gandhi_assasination_20050829.jpg

1992 ம்  வருடம் துவக்கம் அது. அப்போது நான் நெய்வேலியில் 
பணி புரிந்து கொண்டிருந்தேன்.  மத்திய மின்சாரத்துறையின்
 ஒரு அதிகாரி  நெய்வேலியில்  உள்ள ஒரு  மத்தியரசு பயிற்சி
நிறுவனத்தில்  டெபுடேஷனில்  வந்திருந்தார். அவர் கைகள் 
மிக அதிகமாக நீள  காசு புரண்டது. கறுப்பாய்  வாங்கிய 
பணத்தை  வெள்ளையாக்க  அவரது மனைவி பெயரில் 
எல்.ஐ.சி   ஏஜென்சி  எடுத்தார். அவரது  ஊழல்கள் அம்பலமாக
 .சி.பி.ஐ   விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

  அவரது  மனைவி  எல்.ஐ.சி  ஏஜென்ட் என்பதால்  எங்கள் 
அலுவலகத்திற்கும்  அந்த ஏஜென்சி  தொடர்பான தகவல்கள்
 சேகரிக்க ஒரு  சிபிஐ  குழு  வந்தது. அதன் தலைமைப் 
 பொறுப்பில்  ஒரு  இன்ஸ்பெக்டர்.  அவர்  கேட்ட ஆவணங்கள்
எல்லாம் எடுத்துக் கொடுத்தோம். வேறு வழி?


அவர் கேட்ட ஆவணங்களை தேடிக் கொடுத்தது  அவரை 
நண்பராக்கியது. அவர்கள் பணி  முடிந்து கிளம்பும் முன்பாக
சாதாரணமாக  பேசிக் கொண்டிருந்தோம். நரசிம்மராவெல்லாம்
பிரதமராக அருகதை இல்லாத ஆள், நேரு குடும்பத்தைத் 
 தவிர வேறு  யாருக்கும்  இந்தியாவை  ஆள  தகுதியே 
 கிடையாது  என்றெல்லாம்  அவர்  சொல்லிக் கொண்டே
இருந்தார்.

  பேச்சு அப்படியே  ராஜீவ்  காந்தி கொலை  பக்கம் திரும்பியது.
    அப்போது   அவர்  சொன்னதை  அப்படியே   கீழே 
எழுதியுள்ளேன்.


" ராஜீவ்  கொலைக்குப் பின்  புலிகள் தங்கியிருந்த பல்வேறு
 வீடுகளில்  சோதனை செய்தோம். அப்போது   அமைதிப்படை
நடத்திய அட்டூழியங்கள்  குறித்த  புகைப்படங்கள்  அடங்கிய 
புத்தகங்கள் நிறைய கிடைத்தது. ஒவ்வொரு தொகுப்பிலும் 
பல புகைப்படங்கள். சிறுவர்களை, வயதானவர்களை கொலை
 செய்வது, பெண்களை பாலியல் கொடுமை செய்வது  என 
 பல  அராஜகங்களை  பதிவு செய்திருந்தார்கள். அமைதிப்படை
 அழிவுப்படையாகத்தான்  இருந்திருக்கிறது. அந்த 
புகைப்படங்களைப் பார்த்த போது  அமைதிப்படையை 
 அனுப்பிய  ராஜீவ்  காந்தியை கொலை  செய்தது 
நியாயம்  என்றே  எனக்கு தோன்றியது."
  

 நேரு  குடும்பத்தைத்   தவிர  வேறு  யாருக்கும் 
 இந்தியாவை   ஆள   தகுதி கிடையாது   என்று சொன்ன
   ஒரு  அதிகாரி   ராஜீவ்  காந்தி  கொலை  நியாயமானது
 என   சொன்னது  அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் 
மனசாட்சி இன்னமும்  அவருக்கு ஒட்டிக் கொண்டுள்ளது
என்பது மகிழ்ச்சியாகவும்  இருந்தது.



8 comments:

  1. இவ்வளவு தெரிந்த உங்கள் நண்பருக்கு கொலை செய்த நபர்கள் யார், எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டும் ஏன் தெரியவில்லை. இத்தனை அட்டூழியங்களையும் நமது ராணுவத்தினர் செய்ததாக நம்பி சந்தேகப்படும் நீங்கள் அந்த நபர் சொன்னதெல்லாம் உண்மை என்று நம்புவது ஏனோ.

    கோபாலன்

    ReplyDelete
  2. வணக்கம்... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதை

    ReplyDelete
  3. ராணுவத்த விடுங்க.. நம்ம ஊர் போலீஸ் மட்டும் என்னவாம்.. வாச்சாத்தி கொடுமைய வெளியே கொண்டு வந்ததே உங்க மகளிர் அமைப்புதானே...

    ReplyDelete
  4. நீங்கள் அந்த நபர் சொன்னதெல்லாம் உண்மை என்று நம்புவது ஏனோ // ராஜபக்சேவின் செயலர் வீர துங்க .... சர்வதேச விசாரணை நடத்தினால் இலங்கையில் 1980 ஆண்டு முதல் நடந்தவை குறித்து விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறினார். குறிப்பாக அமைதிப்படை வீரர்கள் செயல்பாடுகள் குறித்து விசாரித்தால் இரு நாடுகளின் நட்புறவு பாதிக்கப்படும் எனவும் வீர துங்க தெரிவித்தார்.

    ReplyDelete
  5. ரொம்ப சந்தோஷம். ஒரு உயிரை கொல்ல யாருக்கும் உரிமை இல்லை.?! என்பது எவ்வளவு சரியோ ?. அதுபோல் ஒரு கொலையை நியாயப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை என்பதும்தான் சரி. ஆனால்.,, பாருங்கள் இலங்கை விஷயத்தில் தமிழ்நாட்டில் (ஓரளவிற்கில்லாவிட்டாலும் பேரளவிற்காவது) எல்லோரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தபோது (மாற்று) சிந்தனை சொன்னது என்ன? கொடுத்த குரல் என்ன?. இப்போதும் சிகரமாக வாழ்ந்த சில தோழர்கள் பற்றி கூட பேசவும் எழுதவும் அவகாசம் கேட்கும் சிலர் நினைத்ததையெல்லாம் எழுதுகின்றனர். ஆனால் கொலை குற்றத்தை நியாயப்படுத்த எந்த கட்சியும் அமைப்பும் இதுவரை முன்வரவில்லை. அவர்களின் வாதம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பை நியாயப்படுத்துவதாகவும் அவர்களின் காயங்களை வெளிப்படுத்துவதாகவும் தான் இருந்தது. அவர்களுக்கு தாமதிக்கப்பட்டாவது ஒரு நல்ல தீர்ப்பு வந்தது மகிழ்ச்சி. ஆனால், தோழரின் பதிவில் கொலையை நியாயப்படுத்தும் முயற்சி மேலோங்கி தெரிகிறது சரிதானா ?!

    ReplyDelete
  6. சிவம் சிவம் என சிந்தையில் உள்ளவர்கள் பதிவை மீண்டும் படித்தால் நல்லது. நியாயப்படுத்தியது நானல்ல, அந்த காவல்துறை அதிகாரி. தோழர் கே.ஆர்.சுந்தரம் பற்றி எழுதாதது தவறு. ஒப்புக்கொள்கிறேன்
    விரைவில் எழுதுவேன். மற்றபடி நினைத்ததையெல்லாம் எழுதுவதாக சொல்வதை ஏற்க முடியாது. எது அவசியம், எது அவசியமில்லை என்று முடிவு செய்யும் உரிமை என்னுடையது. அதுதான் வலைப்பக்கத்தின் சுதந்திரம், சிறப்பம்சம். இன்னொன்று இலங்கைப் பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு சரியானது என்பதை தமிழ் தேசிய கூட்டணி பதிவு செய்துள்ளது என்பது எல்லாம் தெரிந்த சிவத்திற்கு தெரியாதா என்ன? மேலும் மற்ற அரசியல் கட்சிகள் போல பல்டி அடிக்கவில்லை என்பதும் தெரிந்திருக்கும்.

    ReplyDelete