Thursday, February 6, 2014

தெலுங்கானா - எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

 http://www.thehindu.com/multimedia/dynamic/01745/KIRAN_KUMAR_REDDY__1745114f.jpg

 http://archives.deccanchronicle.com/sites/default/files/mediaimages/gallery/2013/Aug/2901p-Kiran-Kumar-Reddy-2_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0.jpg

காங்கிரஸ் கட்சி தெலுங்கானா விஷயத்தில் ஒரு நாடகம் நடத்திக்
கொண்டிருக்கிறதோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.

தெலுங்கானா தொடர்பாக காங்கிரஸ் அரசு நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றிய மசோதாவை ஆந்திராவின் சட்டப் பேரவையில்
ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி தோற்கடித்து விட்டார். தெலுங்கானா எதிர்ப்பாளர்களோடு வெளிப்படையாக விவாதிக்கிறார். 
புது டெல்லி வந்து தர்ணா நடத்துகிறார். தலைமைக்கு எதிரான
வெளிப்படையான போர் இது.

காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு கலாச்சாரம் உண்டு. அதனுடைய
வரலாற்றில் எந்த ஒரு முதலமைச்சருடைய உயரமாவது அரை
இஞ்ச் உயர்ந்தாலே அவரை மாற்றி விடுவார்கள். அந்த முதல்வரின்
எதிர் கோஷ்டி எம்.எல்.ஏ க்கள் ஒரு பத்து பேர் டீ சாப்பிட
ஒன்றாக சேர்ந்தாலே அந்த முதல்வரை மாற்றி விடுவார்கள்.
பாதியில் பதவி பறிக்கப்பட்ட காங்கிரஸ் முதல்வர்கள் சங்கம்
என்று துவக்கினால் அதுவே ஒரு மாநாடு போல இருக்கும்.

அப்படி இருக்கும் போது கட்சித் தலைமைக்கு எதிராக 
கிரண் குமார் ரெட்டி வெளிப்படையாக கலகம் செய்கிற போது
காங்கிரஸ் தலைமை ஏன் மவுனம் காக்கிறது? அந்த அளவிற்கு
அந்த தலைமை பலவீனமாகி விட்டதா?

இல்லை தெலுங்கானா பிரிப்பது போல நாங்கள் சொல்கிறோம்,
எதிர்ப்பது போல நீ நடி என்று காங்கிரஸ் கட்சி பேசி வைத்துக்
கொண்டு நாடகம் நடிக்கிறதோ என்று எனக்கு சந்தேகம்.

விஷயம் தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்களேன்.

2 comments:

  1. தெலுங்கானாவை பொறுத்தவரை காங்கிரஸ் ஒரு ஆப்பசைத்த குரங்கு. நம் ப.சி. சோனியாவிடம் நல்ல பெயர் வாங்க அவசர அவசரமாக தனி மாநில அறிவிப்பு விடுத்ததில் இருந்த இதுவரை காங்கிரஸ்-சிற்கு இதனால் எந்த பலனும் இல்லை. தனி மாநிலம் அறிவித்துவிட்டதால், தெலுங்கானா தவிர மற்ற இடங்களில் காங்கிரஸ் மதிப்பிழந்து விட்டது. தெலுங்கானாவில் இந்த பலனை டி ஆர் எஸ் அறுவடை செய்துவிட்டது. காங்கிரஸ் பெற்றது பூஜ்ஜியம்! எவ்வளவு தள்ள முடியுமோ அவ்வளவு தள்ளிப் போடுகிறார்கள். எப்படியும் அடுத்து அவர்கள் அரசு அமைக்கப் போவதில்லை. எவர் அரசு அமைக்கிறாரோ அவர் பிரச்சனை ஆகிவிடும்.

    ReplyDelete
  2. தெலுங்கான உருவாக்கத்தை பரிந்துரைத்த 1956 மாநில சீரமைப்புக் குழுவின் பரிந்துரையை குப்பையில் போட்டு தெலுங்கானா மக்களின் விருப்பத்துக்கு மாறாக ஆந்திராவோடு எழுதாத ஒப்பந்தம் போட்டுக்கிட்டு சேருங்கள் என ஏமாற்றியவர்களே இந்த காங்கிரசார் தான். ஆனால் தெலுங்கானாவின் இத்தனை கால போராட்டத்தை இழுத்தடிக்க முடியாமல் வேறு வழியின்றி இறங்கி வந்துள்ளது. ஆனால் ஐதரபாத்தில் உள்ள ஆதிக்க சாதி ஆந்திரத் தெலுங்கர்களின் சொத்துக்களை எல்லாம் இடம் மாற்ற வேண்டாமா. அதற்கான கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளத்தான கிரண் ரெட்டி போன்றோரினை விட்டு சீமாந்திரா போராட்டத்தை உசுப்பிவிட்டது காங்கிரசு. இதுவரை ஐதரபாத்தில் உள்ள சீமான் துரைகளின் சொத்துக்கள் பாதுகாப்பாக ஆந்திராவுக்குள் கொண்டு செல்லப்பட்டு இருக்கும். இனி தெலுங்கானாவை மொட்டையடித்து விட்டு தனியாக துரத்தி விடுவதே இவர்களின் இப்போதைய எண்ணம். ஐதரபாத்தை பிடிக்கலாம் என்றால் அது தெலுங்கானாவுக்கு நடுவிலே கிடக்கின்றது என்பதால், அந்த ஐடியாவை விட்டு விட்டார்கள். சீமாந்திரர்களின் போராட்டம் தெலுங்கானா மீதான பாசத்தால் அல்ல, ஐதராபத்தில் உயர்சாதி, பணக்காரர்களின் சொத்துக்கள் பறிபோகுதே என்ற வேசத்தால் என்பது தான் உண்மை. அன்று காங்கிரசு அரசாங்கம் மாநில மறுசீரமைப்பில் விட்ட பிழைகள் தொட்ட குறைகளால் தான் இன்று இந்தியா ஏகத்துக்கு சீரற்ற வளர்ச்சிப் பாதையில் போய் கொண்டிருக்கின்றது.

    21 கோடி மக்கள் கொண்ட உத்தர பிரதேசத்தை பிரிக்காமல் வைத்திருப்பதும் இவ்வாறான செயல்களால் தான். தெலுங்கானாவின் வரிசையில் பல மாநிலங்கள் இனி உருவாக கூடும், இம்முறை மொழி அளவீட்டோடு, பொருளாதார அளவீடும் சேர்ந்துள்ளது.

    விதர்பா, பந்தல்காண்டு, அரித் பிரதேசம், பூர்வாஞ்சல், மிதிலாஞ்சல், வட வங்கம், கோசலம், மகா கோசலம், வட கருநாடகம், கோண்டாவன் பஸ்தார் என பல பகுதிகள் வளர்ச்சி அடையாமல் இருப்பதால் தனி மாநிலம் கோரி வருகின்றார்கள். விரைவில் பல புதிய மாநிலப் போராட்டங்கள் வெடிக்க்கும் என்பது மட்டும் நிச்சயம்.

    ReplyDelete