Saturday, March 1, 2014

அன்னா ஹசாராவின் கைகள் கூசியிருக்குமோ?

இந்த வார இதழில் காந்தி குல்லா அணியும் அன்னா ஹசாரேவின்
பேட்டி வெளிவந்திருந்தது.

அதிலே மகளிர் உரிமைகள் பற்றி எழுதப்பட்டுள்ள ஒரு நூலை
ஒரு பெண்மணி அளித்த போது அதை அவர் வாங்க மறுத்து
விட்டு "இதற்கு மேல் எனக்கு என்ன அவசியம்?" என்றதாகவும்
மற்றவர்களுக்கு கொடுங்கள் என்று சொன்னதாகவும்  செய்தி
வந்திருந்தது.

பதில் சொல்ல முடியாத தர்மசங்கடமான  கேள்வி கேட்டதால்
நீ ஒரு நக்ஸலைட் என்று அநாகரீகமாக கத்திக் கொண்டு
காவல்துறையை நடவடிக்கை எடுக்கச் சொல்லி விட்டு நேரடி
ஒளிபரப்பாகும் பேட்டியிலிருந்து வெளியேறிய,

மாநிலத்தில் எந்தப் பெண் பாலியல் வன் கொடுமைக்கு
உள்ளானாலும் அந்தப் பெண் ஒழுக்கம் கெட்டவள் என்று
உடனடியாக சான்றிதழ் அளிக்கிற,

பெண்களை ஈவ் டீஸிங் செய்த கட்சிக்காரர்களை விடுவிக்க
நேரடியாக காவல்நிலையம் சென்று லாக்கப்பை திறந்து விட்ட,

பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் பெண்களூக்கு நியாயம்
வழங்காமல் 20,000 மற்றும் 60,000 என்று இழப்பீடு வழங்குகிறேனே,
அது போதாதா என்று கேட்கிற,
 http://www.ndtv.com/news/images/story_page/Anna_Hazare_Mamata_Banerjee_New_delhi_360_38.jpg

மம்தா பானர்ஜியோடு கூட்டு வைத்துக் கொண்டு அவர் புகழ்பாடிக்
கொண்டு பெண்கள் உரிமை பற்றி நினைக்கவே முடியாது,
 பிறகு எப்படி அது பற்றிய நூலை வாங்குவது என்று 
யோசித்திருப்பாரோ அந்த போலி மனிதர்?
 

No comments:

Post a Comment