Thursday, March 13, 2014

பாவம்பா இந்த ஞான தேசிக சுவாமிகள்

பரிதாபப்படவும் ஒரு தகுதி வேண்டும்
 http://tamil.thehindu.com/multimedia/dynamic/01762/xgnana_1762774h.jpg.pagespeed.ic.-X_U3vgFF3.jpg

பரிதாபத்திற்குரியவர்களை பட்டியலிட்டு பத்மஸ்ரீ விருது வழங்கினால் அந்த பட்டியலில் முதலிடத்தை பிடிப்பவர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகனாகத்தான் இருப்பார்.

மக்களவைத் தேர்தல் தயாரிப்பில் அனைத்துக்கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவரான இவர் மதுரை சித்திரைத் திருவிழாவில் பெற்றோரைத் தொலைத்த பிள்ளையைப் போல கண்ணைக் கசக்கிக்கொண்டு அலைகிறார். இவர் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டபிறகு இவரால் முழுமையான நிர்வாகிகள் பட்டியலைக் கூட தயாரிக்க முடியவில்லை.

அந்தக்கட்சியில் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டால் இரண்டு மூன்று கொலைகள் விழும் என்பதால் இவரும் தலைவர் என்று கூறிக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டார். காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள செக்யூரிட்டிகளைத் தவிர வேறு யாரும் இல்லை. இவரே கூட பல நாள் தனியாக இருக்கப் பயந்துகொண்டு அந்தப்பக்கம் செல்வதில்லை. வழக்கமாக சில தமிழ் அமைப்புகள் சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்று கல் வீசித் தாக்குதல் நடத்துவார்கள்.

அவர்கள் கூட இவர்களது பரிதாப நிலையை கணக்கில் கொண்டு அந்த அலுவலகத்தின் பக்கம் செல்வதை நிறுத்திக்கொண்டனர்.

 இந்த லட்சணத்தில் ஞானதேசிகன் கம்யூனிஸ்டுகளை கிண்டலடித்திருக்கிறார்.“நேற்றுவரை அதிமுக கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்டுகள், இன்று அங்கு இல்லை. காலத்துக்கும் அதிமுகவோடுதான் கூட்டணி என்பதுபோல நடந்து கொண்ட கம்யூனிஸ்ட்டுகளின் இன்றைய நிலை பரிதாபம் தான்“ என்று அவர் கூறியுள்ளார்.

நேற்றைக்கு காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் இருந்த கட்சிகள் கூட இன்று தமிழக காங்கிரசுடன் இல்லை. லெட்டர் பேடு கட்சிகள் கூட காங்கிரசுடன் கைகோர்க்க தயாராக இல்லை. ஆனால் அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு இல்லை என்ற நிலை வந்த வுடன் கம்யூனிஸ்டுகள் கலங்கி நிற்கவில்லை. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு செய்து கம்பீரமாக களத்தில் இறங்கி விட்டன.

தேர்தலுக்காக மட்டும் களம் காண்கிற இயக்கங்கள் அல்ல இவை. காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் மாற்றாக மாற்றுக்கொள்கை யை முன்வைத்து கடந்த காலம் முழுவதும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வந்த பெருமிதத்தோடு தேர்தலைச் சந்திக்க தயாராகிவிட்டனர் கம்யூனிஸ்டுகள். 

 காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த பிழைகளை தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு அறுவடைக்கு அரிவாள் எடுத்துப்புறப்பட்டிருக்கிறது பாஜக பரிவாரம்.

ஆனால் மதவெறியை அனுமதிக்க மாட்டோம்; மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடிப்போம் என்ற முழக்கத்தோடு களத்தில் நிற்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். ஆனால் தமிழக காங்கிரசின் நிலை என்ன? ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைந்திருந்தால் இந்நேரம் சாய்வு நாற்காலியில் படுத்திருக்கும் முதிய தலைவர்கள் கூட கதர்ச்சட்டையைத் தூக்கிப்போட்டுக்கொண்டு தில்லிக்கு விமானம் ஏறியிருப்பார்கள்.

ஆனால் இந்த முறை முதுகில் ஏறி சவாரி செய்ய யாரும் கிடைக்காததால் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன்போன்றவர்கள் கூட நாங்கள்போட்டியிடப்போவதில்லை என்று ஜகா வாங்கிவிட்டார்கள். 39 தொகுதிக்கும் வேட்பாளர்களை தேடிப்பிடிப்பது கூட காங்கிரசுக்கு கஷ்டமான ஒன்றாகவே இருக்கும். சாட்சி கையெழுத்துப்போட பக்கத்து மாநிலத்திலிருந்து ஆட்களைக் கூட்டி வரவேண்டிய அவலமான நிலையில் காங்கிரஸ் கட்சி நிற்கையில் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து பரிதாபப்படுகிறார் ஞானதேசிகன்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை இவர்கள் படுத்திய பாடு கொஞ்சமா நஞ்சமா?.

ஒரே நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஒரு குழு பேச்சுவார்த்தை நடத்த மறுபுறத்தில் சிபிஐ அதிகாரிகளை விசாரணைக்கு அனுப்பி மிரட்டிக்கொண்டிருந்தார்கள். எனவேதான் இந்த முறை காங்கிரஸ் முகத்தில் முழித்தால் பொடிக்கு புகையிலைக் கூட கிடைக்காது என்று திமுக முடிவெடுத்து ஒதுங்கிவிட்டது. தேமுதிகவுக்கு வலைவீசிப்பார்த்தார்கள்.

ஆனால் கேப்டன் ஒரே நேரத்தில் பலருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். மன்மோகன் சிங்கிடம் மனுக்கொடுக்க அழைத்துப்போனார்கள் கேப்டனை.இருவரும் என்ன பேசினார்கள், என்ன புரிந்தது என்று தெரியவில்லை. கடைசியில் தமிழக மக்களின் நலனுக்காக மனுக்கொடுத்துவிட்டு வந் தேன் என்று கேப்டன் கூறிக்கொண்டார். கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்த வுடனேயே ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று அறிவித்து அதன்படியே செயல்பட்டு வந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி நிரந்தரமாக கூட்டு வைத்திருப்பது ஊழலுடன் மட்டுமே. ஆனால் கம்யூனிஸ்டுகள் அவ்வப்போது எழுகிற அரசியல் சூழலுக்கு ஏற்ப நாட்டு நலனை முன்வைத்தே முடிவெடுத்து வந்துள்ளனர். எனவே ஞானதேசிகன் கம்யூனிஸ்டுகளுக்காக பரிதாபப்படுவதை விட்டு விட்டு 39 பேரை தேடிப்பிடித்து அமுக்குவதில் கவனம் செலுத்தட்டும். பரிதாபப்படும் அவரைப்பார்த்து பரிதாபப்படக்கூட ஆள் இல்லை.

- மதுரை சொக்கன்

நன்றி - தீக்கதிர் 13.03.2014

6 comments:

  1. EVERYTHING YOU SAID IS OK. BUT YOU SAID CONGRESS, CONGRESS...IN SOME SENTENCES, WHAT IS THIS? ANY EATABLE ITEM?

    ReplyDelete
  2. சங்கர் தோழர், அதை சாப்பிட முடியாது. ஊசிப் போச்சு. குப்பைத் தொட்டியில்தான் கொட்டனும்

    ReplyDelete
  3. அது எப்படி தோழர், வலிக்காத மாதிரியே உங்களால் இப்படி நடிக்க முடியுது :))

    ReplyDelete
  4. Hello thambi, you have to search for candidates for 22 seats....

    ReplyDelete
  5. Hello 40 edathulla niruthurathukku kooda aalu ellaiye....

    ReplyDelete
  6. அறிவு கெட்ட அனானி, மூஞ்சி காட்ட தெம்பில்லாத கோழை உனக்கெல்லாம் எதுக்கு பதில்? உன் பெயரை சொல்லவே துப்பில்லாத உனக்கு எங்கள பத்தி பேச என்ன அருகதை இருகு? வெக்கம் கெட்டவனே ஓடிப் போ

    ReplyDelete