Tuesday, March 4, 2014

செகுவாரா சொன்னதை காமெடியாக்காதீர், தயவு செய்து




“அநீதியைக் கண்டு பொங்கி எழுந்தால் நீயும் என் தோழனே” என்பது இப்பூவுலகின் உண்மையான புரட்சியாளர்களில் ஒருவரான செகுவாரா சொன்னது.

அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு எழுச்சி தரும் முழக்கம் இது. ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற மாமேதைகள் மார்க்ஸ் ஏங்கல்ஸ் முழக்கம் போல, “கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்” என்ற அண்ணல் அம்பேத்கர் முழக்கம் போல, “ஜெய் ஹிந்த்” என்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முழக்கம் போல, “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற பகத்சிங்கின் முழக்கம் போல செகுவாராவின் இந்த முழக்கமும் முக்கியமானது. எழுச்சிகரமானது.

ஆனால் இப்போது முகநூலிலும் ட்விட்டரிலும் மோசமான ஒரு கலாச்சாரமாக கண்டதையெல்லாம் சொல்லி நீயும் என் நண்பனே என்று வாசகங்கள் அமைப்பது அதிகரித்து வருகிறது.

அவர்கள் காமெடி செய்வதற்கு எத்தனையோ கவுண்டமணி, வடிவேல் நகைச்சுவைகள் இருக்கிறது. செகுவாராவின் கால் தட நிழலில் கூட நிற்க தகுதியற்றவர்கள் நாம் (நான் என்னையும் சேர்த்தே சொல்கிறேன்). அமைச்சர் பதவியை துறந்து புரட்சியை உருவாக்க பொலிவியா சென்று அங்கே ஒரு துரோகியால் காட்டிக் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டவர்.

உலகம் உழைக்கும் மக்களின் கைகளுக்கு வர வேண்டும் என்பதற்காக தன் உயிரை பணயம் வைத்த அந்த மகத்தான தலைவனின் முழக்கத்தை தயவு செய்து காமெடியாய் மாற்றுவதை விட்டு விடுங்கள் என்று அந்த அதி புத்திசாலிகளை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்.



2 comments:

  1. Appa... Sethanda segaru...

    ReplyDelete
  2. உம்மைப் போன்ற லூசு அனானிகளை திருத்தவே முடியாது

    ReplyDelete