Friday, October 10, 2014

அற்புதமாய் அளிக்கப்பட்டுள்ள அமைதிக்கான பரிசு




குழந்தைகளுக்காக போராடும் ஒருவர்,
குழந்தைப் போராளி ஒருவர்,
இருவரும் பெறுவதாலே
அமைதிக்கான நோபல் பரிசு
அர்த்தமுள்ளதாய் மாறியது.

துப்பாக்கியின் தோட்டாக்கள்
துளைத்தது அவளை,
இரக்கமற்ற முதலாளிகள்
ஏவிய குண்டர்களின்
தடிகள் தாக்கியது அவரை.

கொப்பளித்த குருதியால்
மாறவில்லை அவர்கள் உறுதி.


வெறும் வார்த்தையை 
மட்டும் நம்பி
அபத்தமாய் ஒபாமாவுக்கு 
பரிசளித்த  கறை நீங்கி
பளிச்சிடுகிறது அந்த விருது.



இந்தியர் ஒருவர்,
அண்டை நாடாம்
பாகிஸ்தானியர் ஒருவர்
இருவருக்கும் பரிசு
எவ்வளவு இனிமை இதிலே!

போரைத் தவிர்த்து
அமைதியை காத்திடுங்கள்.
இன்றைய தினம் 
இதுவே தேவை.

இன்றைக்கு பரிசு
ஒவ்வொரு நாட்டிலும்
ஒருவருக்கே.
அமைதியை உருவாக்க
ஆட்சியாளர்கள் சிந்தித்தால்
அனைவருக்குமே அது
நல்ல பரிசாகும்.
  வாழ்த்துக்கள் சத்யார்த்தி,
வாழ்த்துக்கள் மலாலா,

பொருத்தமாய் பரிசளித்த
குழுவிற்கும் கூட
வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment