Saturday, November 1, 2014

மோடிஜிக்கு ஒரு வரலாறு புத்தகம் பார்ஸல்



 

வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே என்று இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி போல வாய் மலர்ந்துள்ள நமது இம்சை இல்லையில்லை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சமூகத்திற்கு விண்ணப்பிப்பது யாதெனில்

வரலாற்றை மறக்கக் கூடாது, வரலாற்றை திரிக்கக் கூடாது என்று தாங்கள் மிகவும் சரியாக சொல்லியுள்ளீர்கள். இந்த உபதேசம் வேறு யாரையும் விட உங்களுக்குத்தான் அவசியம் மிகவும் தேவை. தேர்தல் காலத்தில் வரலாற்றை மறந்தோ அல்லது மறைத்தோ நீங்கள் உளறிக் கொட்டி நான்காவது ஐந்தாவது படிக்கும் மாணவர்கள் எல்லாம் என்ன இந்த மாமா தப்பு தப்பா சொல்றாரு, எல்லா பரிட்சையிலும் பெயில் மார்க் வாங்கினவரோ என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.

குறைந்த பட்சம் இந்திய வரலாற்றையாவது நீங்கள் படித்துக் கொள்ளுங்கள். சுதந்திரப் போராட்டம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். சுதந்திரப் போராட்டத்தில் யாரெல்லாம் தியாகம் செய்தவர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள், சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் உங்கள் குரு பீடம் ஆர்.எஸ்.எஸ் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இந்திய சுதந்திரத்திற்காக போராடினார்கள் என்பதை நீங்கள் அக்கறையோடு வரலாற்றைப் படித்தால் உணர்ந்து கொள்ள முடியும். 1806 ம் வருடம் நடைபெற்ற வேலூர் சிப்பாய் புரட்சி தொடங்கி 1857 புரட்சியிலும் பின்பு நடைபெற்ற இயக்கங்களிலும் இந்திய மக்களின் ஒற்றுமையை பார்த்தாவது உங்கள் குரு மகா சன்னிதானம் சொல்வதெல்லாம் அபத்தம் என்பதை உணர்ந்து வெட்கப்படுங்கள்.

வரலாறு மிகவும் முக்கியம் மோடிஜி. ஆகவே படியுங்கள். ஆனால் அதை சுப்ரமணிய சாமி போன்ற கோமாளிகளின் பேச்சைக் கேட்டு திரிக்காதீர்கள்.

யாராவது மோடிஜிக்கு வரலாற்றுப் புத்தகங்களை அனுப்பி வையுங்கள்

1 comment:

  1. அண்மையில் வெளிவந்துள்ள “மோடிஅரசாங்கம்- வகுப்பு வாதத்தின் புதியஅமலை“ நூலையே அனுப்பலாமே? பார்க்க -epaper.theekkathir.org / 2014-11-01 page 5.
    அல்லது ரொமீலா தாப்பர், கோசாம்பி, பிபன் சந்திரா இவர்களின் நூல்களை அனுப்பலாம். இதெல்லாம் புரியாதுப்பா என்றால், வால்காவிலிருந்து கங்கைவரை நூலைக்கூட அனுப்பலாம். அனுப்பலாம்... அவர் படிக்கணுமே? உங்கள் கிண்டல் நடை அருமை தோழரே! தொடருங்கள்.

    ReplyDelete