Wednesday, November 19, 2014

சமஸ்கிருத வெறியர்களும் சமுதாய நல்லிணக்கமும்


சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய சீருடைப் பேரணிக்காக அவர்களுடைய உறுப்பினர்களுக்கு அனுப்பிய அழைப்பிதழ் இது.

எட்டு வரி அழைப்பிதழில் எத்தனை சமஸ்கிருத வார்த்தைகள் பாருங்கள்.

தொண்டர்களை ஸ்வயம்சேவக்குகளாக்கி விட்டார்கள். கணவேஷ் என்றால் தெரிகிறதா? சம்பத நேரம் என்றால் புரிகிறதா? விபாக் சங்கசாலக் என்றால் ஏதோ ஜால்ராவின் சிங்க் சக் சத்தம் போல கேட்கிறதே!

தமிழகத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அனுப்பும் கடிதத்திலேயே மக்கள் பேசாத சமஸ்கிருத மொழியை வலிந்து திணிப்பவர்களால் எப்படி சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்? ராஜேந்திர சோழனை தங்களின் சுவரொட்டிகளில் முன்னிறுத்தியது தமிழனை ஏமாற்றத்தான் என்பது இந்த அழைப்பிதழில் எங்கும் ராஜேந்திர சோழனின் பெயரைக் காணவில்லை என்பதிலேயே நிரூபணமாகிறது.

தாங்கள்தான் தேச பக்தர்கள் என்று வாய் கிழிய பேசுவார்கள். அந்த அழைப்பிதழை இன்னொரு முறை பாருங்கள். "ஓம்" இலச்சினையை கையில் உள்ள கொடியில் கொண்டுள்ள அந்த அம்மன் (பாரத மாதா என்ற ஆர்.எஸ்.எஸ் பம்மாத்தை நான் ஏற்க மாட்டேன்) அமர்ந்துள்ள சிங்கத்தின் காலடியில் இந்திய வரைபடம் மிதிபடுகிறது. இதுதான் அவர்கள் தேசத்தை மதிக்கும் லட்சணம்!

எத்தனை அப்பாவி இளைஞர்கள் இவர்களின் மூளைச்சலவையில் மதி மயங்கி தங்களின் சிந்தனையில் நச்சைக் கலக்க அனுமதிக்கப் போகிறார்களோ! பாவம்....



1 comment:

  1. யாராவது தமிழில் மொழி பெயர்ப்பு செய்திருந்தால் எங்களுக்கும் புரிந்திருக்கும்!

    ReplyDelete