Monday, November 10, 2014

சும்மா, சும்மாதான்

 http://www.bhavakuta.com/images/bollywood-actor-images/N.S.Krishnan.jpg

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களை ஊர்க்காரர் ஒருவர் பார்க்க வந்திருந்தார்.
"வாங்க, ஊருல எல்லாரும் சவுக்கியமா?"
"சவுக்கியமுங்க"
"சரி, என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க?"
"விஷயமொண்ணுமில்லீங்க, சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு..."
"அப்படியா? காப்பி, டீ, ஏதாவது சாப்பிட்டீங்களா?"
"இல்லீங்க, ரெண்டு மசால் வடை மட்டும் வாங்கி சாப்புட்டேன்"
"ஒரு விஷயம் கவனிச்சீங்களா? கடலைப் பருப்பு ஒரிசாவிலேர்ந்து வருது. சின்ன வெங்காயம் ஆந்திராவிலேர்ந்து வரணும். எண்ணெய் ராசீபுரம் ஆயில்பட்டியில இருந்து வரணும். உப்பு, தூத்துக்குடி, அந்த வடையை சுட்ட வடசட்டி, ரூர்க்கேலா சிட்டியில இருந்து வரணும்."
"....?????"
"அட, ஒண்ணுமில்லேப்பா! கேவலம் 20 பைசா வடைக்கே, இத்தனை பேரு, இத்தனை ஊருல இருந்து உழைச்சு அனுப்பி சேர்க்கிறாங்களே? நீ அவ்ளோ தூரத்திலேர்ந்து வந்துட்டு, "சும்மா" வந்தேன்னு சொல்றியே? நியாயமா?"
அதுதான் என்.எஸ்.கே....!

இதை எதற்கு பதிவு செய்துள்ளேன் தெரியுமா?

சும்மா, சும்மாதான் பகிர்ந்துள்ளேன்

1 comment: