Tuesday, January 6, 2015

முதல் திருநங்கை மேயரா?





மது கின்னார் என்ற திருநங்கை பாஜக வேட்பாளரை 4500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சத்திஸ்கர் மாநிலம் ராய்கர் மாநாகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதுதான் இன்றைய தலைப்புச் செய்தி.

உண்மையிலேயே இரண்டு அம்சங்களில் மகிழ்ச்சி தரும் செய்தி இது.

பாஜகவை தோற்கடித்தது என்பது முதல் நல்ல விஷயம்.

இரண்டாவது ஒரு திருநங்கைக்கு அந்த மாநகர மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம். பிச்சையெடுப்பதும் பாலியல் தொழிலும்தான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது என்பதை மாற்ற பலரும் முயலும் போது இச்செய்தி திருநங்கைகளுக்கும் அவர்களுக்காக பாடுபடுபவர்களுக்கும் உற்சாகம் அளிக்கிற செய்தி.

மது கின்னாருக்கு வாழ்த்துக்கள். அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு பாராட்டுக்கள். அவரது செயல்பாடுகள் சிறப்பாக அமைய வேண்டும். அப்போதுதான் திருநங்கைகளுக்கு அரசியல் களத்தின் வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

ஆனால் இவர்தான் முதல் திருந்ங்கை மேயரா?

எனது நினைவுகள் சரியாக இருக்குமானால் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தோர் மற்றும் போபால் மாநகர மேயராக திருங்கைகள் பல வருடங்கள் முன்பே வெற்றி பெற்றுள்ளனர்.

வேண்டுமானால் இப்பtடி  சொல்லலாம்.

திருநங்கைகள் மூன்றாவது பாலினம் என்று அதிகார்வபூர்வமாக அறிவிக்கப் பட்ட பிறகு  வெற்றி பெற்ற முதல் திருநங்கை என்று சொல்வது வேண்டுமானால்  சரியாக இருக்கலாம்..


1 comment: