Saturday, February 14, 2015

காதலர் தினத்திற்கு நான் என்ன எழுதுவது?

இன்று எங்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. வேலூரிலிருந்து வேனில் செல்லும் போதும் போளூர் தோழர்களை வழியில் ஏற்றிக் கொண்டோம். போளூர் கிளைச்செயலாளர் தோழர் சங்கர் எனது பதிவுகளை அன்றாடம் பார்ப்பவர். முகநூலில் அது பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்பவர்.

வேனில் செல்கிற போது காதலர் தினம் பற்றிய உங்கள் அனுபவத்தைப் பற்றி ஏன் பகிர்ந்து கொள்ளவில்லை என்று கேட்டார். அப்படிப்பட்ட அனுபவமே இல்லையே தோழர் என்றாலும் அதை அவர் ஒப்புக்கொள்ள தயாராக இல்லை.

கல்லூரியில் படிக்கும் போது, எல்.ஐ.சி யில் சேர்ந்த போது என்றெல்லாம் மீண்டும் வேறு கேட்டார்.

அவருக்கு விளக்கமாக பதில் சொல்ல வேண்டியிருந்தது.

கல்லூரில் படிக்கும் காலத்தில் நாங்கள் இறுதியாண்டு முடிக்கும்வரை ஆண்கள் கல்லூரியாக இருந்தது நாங்கள் படித்து முடித்ததும் இரு பாலர் கல்லூரியாக்கி விட்டார்கள்.

அதே போல எல்.ஐ.சி யில் பணியில் சேர்ந்த போது மிகவும் இளையவன் நான்தான். 

இப்படியெல்லாம் அவருக்குச் சொன்னாலும் கூட உண்மையான காரணம் என்பது ஒன்றுதான். 

அன்றிருந்த பொருளாதாரச் சுமையில் காதல் என்ற உண்ர்வு தோன்றுவதற்கான சூழலே இல்லை என்பதுதான் அது.

அப்படி இருக்கையில் காதலர் தின அனுபவம் என்று எதை நான் எழுத முடியும்?
 

2 comments:

  1. பொருளாதார சூழ்நிலை என்பதை விட ......பொறுப்பை உணர்ந்த நிலை என நான் ஊகிக்கிறேன்....

    ReplyDelete
  2. //பொறுப்பை உணர்ந்த நிலை என நான் ஊகிக்கிறேன்.//
    மிக சரியான கருத்து.
    அல்லது தமிழ் படங்களில் காட்டுவது போல் கல்லூரி செல்வது காதலிப்பதற்காகவே என்றாகிவிடும்.

    ReplyDelete