Wednesday, February 18, 2015

அது என்ன சுயம்வர மாலையா?

 http://i00.i.aliimg.com/photo/259129428/Wedding_Decoration_Wedding_garland__Rose_Garland.jpg
நேற்று அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது நடைபெற்ற ஒரு நிகழ்வு. ஒரு இறுதி ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது. மொத்தமாக ஒரு இருபது, இருபத்தி ஐந்து பேர் இருப்பார்கள். சோகம் தோய்ந்த முகத்தோடு ஓரிருவர் மட்டும். டாஸ்மாக் உற்சாகத்தில் மீதமுள்ளவர்கள். வழக்கம் போல  கையில் பட்டாசைக் கொளுத்தி சாலையின் நடுவே வெடித்துக் கொண்டிருந்தார்கள்.

உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் அமர்ந்திருந்த ஒரு மனிதன் இறந்த உடல் மீது போடப்பட்ட மாலைகளை அவன் தலையைச் சுற்றி சாலையில்  வீசிக் கொண்டிருந்தான்.பொதுவாக மாலைகளை பிய்த்து தரையில் போடுவார்கள். அதுவே சாலையை குப்பைத் தொட்டியாக மாற்றி விடும்.

ஆனால் இந்த மனிதன் மேலிருந்து கீழே வீச தங்கள் மீது அந்த மாலை விழக்கூடாதே என்று தங்கள் வாகனத்தை வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றார்கள். அது என்ன அந்த காலத்து சுயம்வர மாலையா, அனைவரும் தங்கள் கழுத்தில் விழ வேண்டும் என்று ஆர்வத்தோடு கழுத்தை நீட்ட?

செண்டிமெண்டில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கூட ஒரு சடலத்தின் மீது போடப்பட்ட மாலை தன் மீது விழுவது என்பது எரிச்சல் தரக்கூடியது என்றால் செண்டிமெண்ட் பார்ப்பவர்களுக்கு?

வாகனம் ஓட்டுப்வர் கண் மீது பட்டு அதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பும் அதிகமாக உண்டு. சத்தம் போட்டால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு டாஸ்மாக்கின் ஆதிக்கத்தில் இருப்பவர்களோடு பேசுவதும் விரயம்.

சவ ஊர்வலங்களிலும் ஒரு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டிய  அவசியத்தை குடிமக்கள் உருவாக்குகிறார்கள்.

8 comments:

  1. யாராவது சொல்லமாட்டாங்களா என்று நினைத்திருத்தேன்.
    எமது குடிமக்களின் மிக அருவருப்பான பக்கத்தை சொன்ன உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. மக்களின் பொது நலன் இப்படி இருக்கிறது.

    ReplyDelete
  3. பூக்கள் புனதமானது, காலில் மிதிபடக்கூடாது, ஆனால் நாம் என்று தவ்வி தவ்வி செல்ல வேண்டியதாகிவிட்டது.நன்றி.

    ReplyDelete
  4. ஒரு இறுதி ஊர்வலத்தை இப்படியுமா? நடத்துவார்கள்.
    உடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  5. குடித்துவிட்டு ரோட்டுக்கு வருபவர்களுக்குத் தூக்குத் தண்டனை தரவேண்டும். சிகரெட்டைப் பொது இடத்தில் பிடிக்கும் கயவாளிகளுக்கும் அதே தண்டனை கொடுக்க வேண்டும். இவர்களெல்லாம் இந்த நாட்டில் இல்லை என்று யார் அழுதார்கள், என்று கேட்கும் நிலையை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள்.

    ReplyDelete
  6. Raman, You are great for bringing up this.

    ReplyDelete
    Replies
    1. I also agree this!!

      Periya saaamy

      Delete
  7. வேண்டுமென்றே அருகில் செல்லும் பேருந்துக்குள் மாலைகளை வீசி எரிந்ததை பார்த்திருக்கிறேன்

    ReplyDelete