Saturday, March 21, 2015

ஆபத்து தேவையா நண்பர்களே?




இன்று காலை எங்கள் கட்சி அலுவலகத்தில் ஒரு கூட்டம். சென்னை பெங்களூர் தங்க நாற்கர நெடுஞ்சாலையில் உள்ளது அலுவலகம். கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய தோழர்களின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்த வேளையில் முதல் மாடியில் நின்றபடி சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது கண்ட காட்சியின் விளைவுதான் இப்பதிவு.

அதி வேகத்தில் கார்கள் விரைந்து சென்று கொண்டிருந்தது. பத்து கார்களில் நான்கு  கார்களிலாவது ஓட்டுனர்கள் அலைபேசியில் பேசிக் கொண்டுதான் காரை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். நான் ஒரு ஐம்பது கார்கள் வரை கவனித்தேன். இருபத்தி இரண்டு பேர் போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டினார்கள். அவர்களின் வேகமும் அப்படி ஒன்றும் மிதமானதாகக் கூட இல்லை.

இப்படி ஆபத்தை தானாகவே வரவழைத்துக் கொள்ள வேண்டுமா?

அந்த ஆபத்து அவர்களுக்கு மட்டும்தானா?

அவர்கள் ஓட்டும் வாகனத்தில் உள்ளவர்கள் உட்பட எதிர் வரும் வாகனம், பாதசாரிகள் என்று அனைவருக்கும்தானே!

ஒன்று வண்டி ஓட்டுங்கள்,
இல்லை போனில் பேசுங்கள்.
இரண்டும் வேண்டாமே, தயவு செய்து
 

1 comment:

  1. உலகம் எங்கே போகிறது என்று தெரியவில்லை? இதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதுவும் புரியவில்லை?

    ReplyDelete