Thursday, April 30, 2015

திருமணம் புனிதமானதாக இருக்கலாம், பாலியல் வன் கொடுமையுமா?



கணவனே ஆனாலும் மனைhttp://being-her.com/wp-content/uploads/2015/01/marital-rape-poster.jpgவியின் விருப்பமின்றி கட்டாயம் செய்தால் அதுவும் பாலியல் வன் கொடுமைதான் என்று உலகின் பல நாடுகளின் சட்டம் சொல்கிறது. இந்தியாவும் அது போல சட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பரிந்துரை செய்துள்ளது. அரசு என்ன செய்யப் போகிறது என்று திமுக எம்.பி திருமதி கனிமொழி கேட்ட கடிதத்திற்கு பாஜக அரசு அனுப்பியுள்ள பதில் வினோதமானது.

இந்தியாவில் அது சாத்தியமில்லை என்பதற்கு மோடி அரசாங்கத்தின் அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சௌத்ரி “இந்தியாவில் திருமணங்கள் புனிதமாக கருதப்படுகிறது. குறைந்த கல்வியறிவு, அறியாமை, மத நம்பிக்கைகள், ஏராளமான சமூக பழக்கவழக்கங்கள், வறுமை, சமூகத்தின் மனப்பாங்கு ஆகிய காரணங்களால் திருமணத்திற்கு மக்கள் புனிதத்தன்மை அளித்து விட்டனர். ஆகவே திருமண பாலியல் வன் கொடுமைகளுக்கு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள விலக்கை திரும்பப் பெற முடியாது” என்று தெளிவாக சொல்லி விட்டார்.

மனைவி கணவனின் அடிமை என்ற காவிக்கூட்ட கொள்கையை அவர் வெளிப்படையாக சொல்வதற்குப் பதிலாக பூசி மெழுகுகிறார். இதற்கு ஒரு புனிதப் பூச்சு வேறு. பொதுவாக “நம்பிக்கை” என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்து விளையாடுவார்கள். இப்போது “குறைந்த கல்வியறிவு, அறியாமை, வறுமை” போன்ற வார்த்தைகளை இணைத்துள்ளதன் மூலம் ஏதோ சமூகத்தின் அடித்தட்டு மக்கள் மட்டுமே பெண்களின் உணர்வுகளை மதிக்காமல் திருமண பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது போன்ற தோற்றத்தை உருவாக்கி மேல் தட்டு மக்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் முயற்சியும் தெரிகிறது.

விருப்பமில்லாத மனைவியை துன்புறுத்தும் கணவர்களுக்கு புனிதம் என்ற போர்வையில் பாதுகாப்புக் கவசம் தருவது நியாயம்தானா?  பெண்களின் உணர்வுகளுக்கு மரியாதையே கிடையாதா? பாலியல் வன் கொடுமை யார் செய்தாலும் தவறுதான். அது கணவன் மனைவியை என்றாலும் கூட.


1 comment: