Thursday, April 9, 2015

பஞ்சாப் முட்டைக் கறியும் சைவமாயிடுச்சு



பஞ்சாப் சிக்கன் கறிக்கு அடுத்து மாற்றி சமைத்த இன்னொரு இணை உணவு பஞ்சாப் முட்டைக் கறி

இது  நேரத்தையும் உழைப்பையும் அதிகமாகவே எடுத்துக் கொள்கிற தயாரிப்பு.

முதல் மூன்று நடவடிக்கைகள்.

முந்திரி பருப்பை சுடுநீரில் கொஞ்ச நேரம் ஊற வைத்து அதனை வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, இஞ்சி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்

தக்காளியில் மிக்ஸியில் போட்டு சாறெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுறித்து கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.


பிறகு ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், பிரியாணி இலை போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி பின்பு தக்காளி சாறு ஊற்றவும். அதன் பின்னர் உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, தனியா பொடி, மசாலா பொடி என்று வரிசையாக சேர்க்கவும். இந்த கலவையில் உருளைக்கிழங்கு துண்டங்களையும் போட்டு வதக்கவும். 



பிறகு ஏற்கனவே தனியாக எடுத்து வைத்துள்ள வெங்காய மசாலாவையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கொண்டு நன்றாக கொதித்த பிறகு எடுத்து கொத்தமல்லி தூவி பறிமாறவும்.



பஞ்சாப் சிக்கன் கறியை காலி ப்ளவர் குருமாவாக மாற்றியாக விட்டது.

பஞ்சாப் முட்டைக் கறியை உருளைக்கிழங்கு கொண்டு தயாரித்தாகி விட்டது.

இன்னும் மிச்சம் இருப்பது பஞ்சாப் மட்டன் கறி.

அதை எதைக்கொண்டு சைவமாக மாற்றுவது?

ஞாயிற்றுக் கிழமைக்குள் நல்ல யோசனை சொல்லுங்களேன்.

2 comments:

  1. உணவு தயாரிப்பு கிங்கிற்கு ஆலோசனை தேவைபடுகிறதா!!!
    நானெல்லாம் நீங்க யாராவது யோசித்து செய்முறை செய்து உணவு தயாரிப்பு கண்டுபிடிக்க அதை அப்படியே எடுத்து எவ்வளவோ கஷ்டபட்டு செய்து சுவையாக சாப்பிடுவது தான்.
    துளசி மேடம் நேரம் கிடைச்சா உதவுவார்.

    ReplyDelete
  2. சோயா உருண்டைகளை உபயோகித்துப் பாருங்கள். ஆனால், சிலருக்கு சோயா சுவை பிடிக்காது.

    ReplyDelete