Wednesday, June 17, 2015

இப்படி ஏமாற்றலாமா?

ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்கள் குற்றாலத்தில் ஒரு பயிற்சி வகுப்பு. மணிமுத்தாறு, பாபனாசம் அகத்தியர் அருவிக் குளியல்களுக்குப் பிறகு குற்றால அருவிக்குளியலும் நமக்குக் கிடைக்கிறதே என்று மகிழ்ச்சியோடு சென்றால் இயற்கை ஏமாற்றி விட்டது. எந்த அருவியிலும் தண்ணீர் இல்லை. 

ஐந்தருவியில் தண்ணீர் வருகிறது என்று தகவல் கிடைத்து இரவோடு இரவாக சென்றால் ஐந்தருவி ஓரருவியாக மாறி ஒரே ஒரு இடத்தில் மட்டும் கொஞ்சமாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சரி இதுவாவது கிடைத்ததே என்று ஆறுதல் அடைய வேண்டியிருந்தது.

குற்றாலப் பயணத்திற்கான பிரதான நோக்கம் வகுப்பு என்பதால் பரவாயில்லை. அருவிக் குளியலுக்காக மட்டும் சென்றிருந்தால்தான் ஏமாற்றம் மிகவும் அதிகமாக இருந்திருக்கும்.

குற்றாலம் சென்று வந்ததன் அடையாளமாக தங்கியிருந்த இடத்திலிருந்து எடுத்த சில புகைப்படங்கள் கீழே.

இங்கே மரங்கள் மலையை மறைத்து விட்டது.
மழைச்சாரலை மறைத்தது யாரோ?







 

4 comments:

  1. உண்மையில் அருமையான படங்கள் .தென்னை மரமும் அதனுடே தெரியும் மலையும் அருமை .தென்னையை பார்த்து எவ்வளவு நாளாச்சு ?

    ReplyDelete
  2. இப்படி ஏமாறலாமா?

    ReplyDelete
  3. சிறப்பான படங்கள்! நன்றி!

    ReplyDelete
  4. ஆகா
    இன்று தண்ணீர் அதிக அளவில் கொட்டுவதாக
    தொலைக் காட்சியின் பார்த்தேன்
    படங்கள்அருமை நண்பரே நன்றி

    ReplyDelete